தமிழைப் பிழையின்றி எழுதுவோம்
61
நூல்களிலிருந்து புதிய சொற்கள்
நாம் படிக்கும் பாடல், உரைப்பகுதி, கதை, கட்டுரை முதலியவற்றில் இடம்பெற்றுள்ள புதிய சொற்களை அறிந்துகொள்வதோடு, அவற்றைப் பயன்பாட்டு நிலையில் நிலையில் இருக்குமாறும் பார்த்துக்கொள்ளல் வேண்டும்.
மயங்கொலிச் சொற்களின் பொருள் வேறுபாடு
மயங்கொலி எழுத்துகளில் ஓர் எழுத்து வரவேண்டிய இடத்தில் வேறோர் எழுத்து வந்துவிட்டால், பொருள் மாறிவிடும். இதனைப் புரிந்துகொண்டு பல சொற்களின் சரியான பொருளை அறிந்துகொள்ள முடியும்.
ஒரே பொருள் தரும் பல சொல்
அழகு என்னும் பொருளைத் தரும் கவின், பொலிவு, வனப்பு முதலிய சொற்களை அறிந்து கொள்ளலாம். நிலவு என்பதைக் குறிக்க மதி, திங்கள், சந்திரன், அம்புலி, நிலா முதலிய சொற்களை அறிந்துகொள்வதால், தாம் உருவாக்கும் படைப்புகளில் அவற்றைப் பயன்படுத்தலாம்.
சிந்தனை வினா
முந்நீர், ஆழி, பரவை, தடாகம், குளம், கேணி, கிணறு, ஊருணி சுனை, பொய்கை முதலிய சொற்கள் எல்லாம் நீர்நிலை என்னும் ஒரே பொருளைக் குறிக்கின்றன. இப்பட்டியலில் 'ஆறு' சேருமா? சேராது எனில், காரணம் கூறுக.
பல பொருள் தரும் ஒரு சொல்
மா என்ற சொல்லுக்கு மாமரம், மாம்பழம், மாவு, குதிரை, பெருமை எனப் பல பொருள் உண்டு. ஒளி என்று சொல்லுக்கு விளக்கு, புகழ், பெருமை, அழகு, சூரியன், சந்திரன், விண்மீன் எனப் பல பொருள் உண்டு. இத்தகைய சொற்களை அறிந்துகொள்வதால், சொற்களஞ்சியத்தைப் பெருக்கிக் கொள்வதோடு, இடம் நோக்கிப் பொருத்தமுறப் பேசவும் எழுதவும் செய்யலாம். இதனால், பிழையான சொற்களும் பொருள் மாறுபாடான சொற்களும் தவிர்க்கப்படும்.
தொகைச்சொற்கள்
தொகுத்துச் சொல்லும் சொற்கள் தொகைச்சொற்கள். தொகைச் சொற்களைப் பிரித்தும் விரித்தும் கூறுவதால், சொற்களஞ்சியம் பெருகும். இருவினை என்னும் தொகைச்சொல்லைப் பிரித்தால் இரண்டு வினை எனவும் அவற்றை விரித்தால், நல்வினை/ தீவினை எனவும் கூறலாம். மேலும், இலக்கண அடிப்படையில் செய்வினை/ செயப்பாட்டு வினை, தன்வினை/ பிறவினை எனவும் விரித்துக் கூறலாம்.