பக்கம்:தமிழைப் பிழையின்றி எழுதுவோம்.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64

தமிழைப் பிழையின்றி எழுதுவோம்







மரபுத்தொடர், பழமொழி, உவமை பயன்பாடு

நாம் எழுத விரும்பும் உரைப்பகுதிகள், கட்டுரைகள் முதலியவற்றில் மரபுத்தொடர், பழமொழி, உவமைத் தொடர்கள் ஆகியவற்றைப் பொருத்தமாகப் பயன்படுத்துவதால் சரியான கருத்து வெளிப்படும்.

முருகனின் குடும்பம், வாழையடிவாழையாக வேளாண்மைத் தொழில் செய்து வருகிறது.

(மரபுத்தொடர்)

தாயைக் காணாத குழந்தையின் முகம் மழை காணாத பயிர்போல வாடியது. (உவமைத்தொடர்)

வேலையின்றிச் சோம்பித் திரிந்த கண்ணன் உணவின்றி வாடியதால், உழைப்பே உயர்வு என்பதை உணர்ந்துகொண்டான். (பழமொழி)

தொடரை நீட்டித்து எழுதுதல்

ஒரு தொடரில் புதிய சொற்களை இணைப்பதன் மூலம், தொடரை நீட்டிக்கலாம். இதனால், பல சொற்களின் பயன்பாட்டையும் அவற்றை எந்தெந்த இடங்களில் பயன்படுத்த வேண்டும் என்பதையும் அறிந்துகொள்ளலாம்.

(எ.கா.) நான் வரைந்தேன்

நான் படம் வரைந்தேன்

நான் மயில் படம் வரைந்தேன்

நான் அழகான மயில் படம் வரைந்தேன்

நான் நேற்று அழகான மயில் படம் வரைந்தேன்

நான் நேற்று மாலை அழகான மயில் படம் வரைந்தேன்

என இவ்வாறு தொடரை நீட்டித்து அமைப்பதால், சொற்களஞ்சியம் பெருகும்.

2.7 பொருண்மைச் சூழல்

நாம் பேசும்போது, பல சொற்களை அவற்றின் தன்மை உணர்ந்து பயன்படுத்துகிறோமா என்று உணர்வதில்லை. குறிப்பிட்ட ஒரு சொல், ஒவ்வொரு தொடரிலும் வெவ்வேறு பொருள் தருவதனை எப்போதாவது அறிந்திருக்கிறோமா? கீழ்க்காணும் எடுத்துக்காட்டுகளைக்

கவனியுங்கள்.

தொடர்கள்

'கை வலிக்கிறது'

உணர்த்தும் பொருள்

உடலின் ஓர் உறுப்பு

'கையூட்டு கொடுப்பதும் வாங்குவதும் குற்றம்'

- உழைப்பின்றி வரும் பணம்