தமிழைப் பிழையின்றி எழுதுவோம்
65
'தன் கையே தனக்கு உதவி'
'கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை'
கள்வனைக் கையும்களவுமாகப் பிடித்தனர்
முருகன், வள்ளியைக் கைபிடித்தான்
கண்ணனை ஒரு கை பார்த்துவிடவேண்டும் ஆட்டத்தில் ஒரு கை குறைகிறது
உழைப்பின் மேன்மை
அருகில் என்னும் பொருள்
- ஒரு செயலை நேரடியாகப் பார்த்தல்
- திருமணம் புரிதல்
―
- சரியான பாடம் கற்பித்தல்
- ஓர் ஆள் (எண்ணிக்கை) தேவை
படித்தீர்களா? எத்தனை கைகள்? என்னென்ன பொருள்களைத் தருகின்றன? மேற்குறிப்பிட்ட ஒவ்வொரு தொடரிலும் 'கை' என்னும் சொல், ஒவ்வொரு பொருள் தருவதை உணர்ந்திருப்பீர்கள். இதே சொல்லைப் பயன்படுத்தி உங்களாலும் வேறு சில தொடர்களை உருவாக்கமுடியும் அல்லவா!
'கை' என்பதன் அகராதிப் பொருள், மனித உடலின் ஓர் உறுப்பு. 'கை' என்பது, அடிப்படையில் ஒரு பெயர்ச்சொல். இதே சொல், உணர்வுப் பொருளாகவும் பயன்பாட்டுப் பொருளாகவும் சூழலுக்கேற்பப் பொருள் மாறுகின்றது.
சூழல் கோட்பாடு -( Contextual Theory)
ஒரு மொழியிலுள்ள சொற்கள், தொடர்கள் ஆகியன சமுதாயச் சூழல்களைத் தழுவியே பொருண்மைகளை உணர்த்துகின்றன. சூழல்கோட்பாடு என்பது, ஒலிச் சூழல், உருபன் இணைப்புச் சூழல், இலக்கணச் சூழல், சொல் இணைப்புச் சூழல், பேச்சுச் சூழல் ஐவகைப்படும். அவற்றை எடுத்துக்காட்டுகள்வழிக் காண்போம்.
அ) ஒலிச் சூழல்
பலகை
பல கை
பலகை என்னும் சொல், ஒரு சொல்லாகத் தனித்து ஒலிக்கும்போது, மரப்பலகை என்னும் பொருளையும், பல சொல்லாகத் தொடர்ந்து ஒலிக்கும்போது, பல கைகள் என்னும் பொருளையும் தருகின்றது. இவ்வாறு வரும் சொற்களைப் பொதுமொழி எனப் படித்திருப்பீர்கள்.
ஆ) உருபன் இணைப்புச் சூழல்
ஆறு - ஆற்றை (ஆறு + ற்+ ஐ) ஆறை (ஆறு+ஐ)
ஆறு என்னும் சொல்லுடன் ஐ என்னும் உருபன் சேரும்போது, சூழலுக்கேற்பப் பொருள் மாற்றம் பெறுகிறது. ஆறு + கடந்தான் எனக் கூறும்போது, ஐ உருபனுடன் ஒற்று இரட்டித்து, ஆற்றைக் கடந்தான் எனவும், ஐந்துடன் ஆறு என்ற எண்ணைக் கூட்டு என வரும்போது, ஐ உருபன் மட்டுமே இணைந்து ஆறைக் கூட்டு எனவும் பொருள் தருகிறது.