68
தமிழைப் பிழையின்றி எழுதுவோம்
பொதுப்பொருட்பேறு
பெயர், பின்னர் அதனைப்போன்ற பொதுப்பொருட்பேறு என்கிறோம்.
முன்பு, ஒருவகைப் பெயருக்கு பெயருக்கு வழங்கிவந்த பெயர், பலவற்றிற்கும் பொதுப்பெயராக வழங்குவதைப் எடுத்துக்காட்டாக, எள்ளினின்று எடுக்கப்பட்டதனை, 'எண்ணெய்' என்றனர். இன்றோ தேங்காய் எண்ணெய், மண்ணெண்ணெய், விளக்கெண்ணெய் எனப் பொதுப்பெயராக வழங்குகின்றனர். தண்மை (குளிர்ச்சி) பொருந்திய நீரே 'தண்ணீர்' எனப்பட்டது. இப்போது கஞ்சித்தண்ணீர், சீரகத்தண்ணீர், மிளகுத்தண்ணீர், காப்பித்தண்ணீர் (Coffee) எனப் பொதுவாகக் கூறுகின்றனர்.
சொற்பொருள் மாற்றம் குறித்த ஆய்வின் பயன்கள்
சொற்பொருள் மாற்றம் பற்றிய ஆய்வு, தமிழில் சொற்களின் நிலை, பொருண்மை அடிப்படையில் அவை எவ்வாறு பின்னிப் பிணைந்துள்ளன என அறிந்துகொள்ள வழிவகுக்கும். பலவகைப்பட்ட அகராதிகளை உருவாக்குவதற்குத் துணைபுரியும்.
2.8 தொகுப்புரை
தமிழில் சொற்கள் எவ்வாறு உருவாகின்றன, அவற்றின் வகைகள் என்னென்ன என்பன பற்றி இந்தப் பாடத்தில் அறிந்துகொண்டோம். ஒரு சொல்லிலுள்ள உறுப்புகளின் பெயர்கள், அவை எந்தெந்த இடங்களில் இடம்பெறும் என்பது குறித்தும் தெரிந்துகொண்டோம். பொருள் அடிப்படையில் தனிமொழி, தொடர்மொழி, பொதுமொழி குறித்தும் புரிந்துகொண்டோம். இலக்கிய வகையிலும் இலக்கண வகையிலும் சொற்களின் வகை, தமிழில் பிறமொழிச் சொற்கள் கலந்துள்ள நிலை முதலிய செய்திகளை இந்தப் பாடத்தின் வாயிலாக அறிந்துகொண்டோம். ஆகவே, நம்முடைய பேச்சிலும் எழுத்திலும் பொருளுடைய எழுத்திலும் பொருளுடைய சொற்களைப் பிழையின்றிப் பயன்படுத்துவோம். பிறமொழிச் சொற்கள் கலக்காமல் தூய தமிழ்ச்சொற்களை அடையாளம் கண்டு அவற்றை நடைமுறை பயன்பாட்டில் பின்பற்றுவோம்.