பக்கம்:தமிழைப் பிழையின்றி எழுதுவோம்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70

தமிழைப் பிழையின்றி எழுதுவோம்







பின்வரும் உரைப்பகுதியில் அடிக்கோடிட்ட சொற்களை இலக்கிய வகைப்படுத்துக.

நான் நேற்று சினிமாவுக்குச் சென்றேன். என்னுடன் ஜோதியும் வந்தாள். இருவரும் ஐம்பது ரூபாய் கொடுத்து நுழைவுச்சீட்டு வாங்கினோம். நாங்கள் பார்த்த திரைப்படம் சுவாரசியமாக இருந்தது. ஜோதி படம் நன்றாக இருந்ததென இயம்பினாள். படம் முடிந்ததும் அருகிலிருந்த பஜாருக்குச் சென்றோம். பின்னர், வீட்டிற்கு வந்தோம்.

பின்வரும் உரையாடலிலிருந்து ஆகுபெயர்களைக் கண்டறிக.

மணிமொழி : நேற்று பெய்த மழையால் நம் ஊரே மகிழ்ந்தது, தெரியுமா?

கனிமொழி

மணிமொழி

கனிமொழி

மணிமொழி

மணிமொழி :

ஆமாம். காய்ந்திருந்த பயிர்கள் இனி வாடாமல்

இருக்குமல்லவா. அப்போதுதானே உரிய காலத்தில் நெல் அறுக்கமுடியும்?

சரியாகச் சொன்னாய். அதுசரி, இன்று நம் பள்ளிக்கு விடுமுறையா?

ஆமாம். நேற்று பெய்த மழையால் நம் பள்ளிக்குள் மழைநீர் தேங்கியுள்ளதாம். அதனால்தான்.

ஓ! அப்படியா? நல்லவேளை. நான் தமிழ்த் தேர்வுக்குத் தயாராக நேரம் கிடைத்தது. குறள் படிக்க வேண்டும். வீட்டிற்குச் செல்கிறேன்.

நானும் கம்பரைப் படிக்க வேண்டும். நாளை பள்ளியில் சந்திப்போம்.

ஊ) ஓரிரு தொடரில் விடை கூறுக.

1. ஒரு சொல்லைப் பகுபதம், பகாப்பதம் என எதன் அடிப்படையில் கூறுகிறோம்?

2. முக்கோணம் - இச்சொல், எப்படிக் காரணப்பெயராகும்?

3. நிலவைக் குறிக்கும் வேறு சொற்களைக் கூறுக. இவை எவ்வகைச் சொற்களாகும்?

4. 'எட்டு' - இச்சொல், தனிமொழியா? பொதுமொழியா? காரணம் கூறுக.

5. 'பஸ்ஸில் ஏறியதும் கண்டக்டர்

டிக்கட் வாங்கச் சொன்னார்'. இத்தொடரில் இடம்பெற்றுள்ள திசைச்சொற்களைக் கண்டறிந்து, அவற்றிற்கு இணையான தமிழ்ச்சொற்களைக் கூறுக.