தமிழைப் பிழையின்றி எழுதுவோம்
71
6. பின்வரும் படத்திலிருந்து எவையேனும் எட்டுச் சொல்லைக் கண்டறிந்து, அவற்றை இலக்கணவகைச் சொற்களாக வகைப்படுத்துக.
று
7. பின்வரும் படத்திற்குப் பொருத்தமான தொடரை உருவாக்குக. அத்தொடரிலிருந்து தெரிநிலை வினைமுற்றைக் கண்டறிந்து, அது வெளிப்படையாக உணர்த்தும் ஆறு பொருளையும் கூறுக.
8. பின்வரும் உரைப்பகுதியிலிருந்து பெயரெச்சம், வினையெச்சம் கண்டறிக.
அப்பா வீட்டிற்குள் நுழைந்ததும் நானும் என் தம்பியும் பாடம் படிக்கத் தொடங்கினோம். தம்பி விரைவாகப் படித்து முடித்தான். நான் விளையாடிய விளையாட்டை எண்ணிச் சிரித்துக் கொண்டிருந்தேன். சிறிதுநேரம் கழித்து, அப்பா எங்களை அழைத்தார். படித்த பாடத்திலிருந்து கேள்வி கேட்டார். நான் திருதிருவென விழித்தேன். தம்பி கடகடவென விடை சொன்னான். அவனைப் பாராட்டிய அப்பா, என்னையும் ஊக்குவித்தார். இருவருக்கும் புதிய எழுதுகோல் தந்தார். அன்றுமுதல், கவனத்துடன் படிக்கவேண்டும் என்பதை நான்
உணர்ந்துகொண்டேன்.