தமிழைப் பிழையின்றி எழுதுவோம்
75
"கவிதா கவிதை எழுதினாள்" இந்தத் தொடரில் செயலைச் செய்தது யார்? என்னும் வினாவை எழுப்பும்போது கவிதா என்னும் சொல் விடையாகக் கிடைக்கின்றது. கவிதா கவிதை எழுதினாள் எள்னும் தொடரில் எழுவாய் "கவிதா" ஆகும். இது வெளிப்படையாக வந்துள்ள எழுவாய்.
எடுத்துக்காட்டு - 2 (மறைந்து வரும் எழுவாய் / தோன்றா எழுவாய்)
பாடம் படி
அறம் செய விரும்பு
"பாடம் படி" இந்தத் தொடரில் செயலைச் செய்வது யார்? என்னும் வினாவை எழுப்பும்போது பாடம் படி என்பதில் நீ என்னும் எழுவாய் மறைந்து வந்துள்ளது. எனவே இங்கு 'நீ' என்பது தோன்றா எழுவாய் ஆகும்.
3.2 பயனிலை
ஒரு தொடரில் என்ன செயல் நிகழ்கிறது எனக் கேள்வி கேட்கப்படும்போது அதற்கான விடையாக அமைவது பயனிலை. பயனிலை வினைச் சொல்லாக அமையும். பயனிலையை மூவகையாகப் பிரிக்கலாம். அவை பின்வருமாறு,
பயனிலை
வினைப் பயனிலை
பெயர்ப் பயனிலை
வினாப் பயனிலை
நான் வந்தேன்
சொன்னவள் கவி
வினைமுற்று
பெயர்ச்சொல்
வருபவர் யார்?
வினா
3.3 செயப்படுபொருள்
ஒரு தொடரில் எதை, யாரை, எதனை, எவற்றை எனக் கேட்கப்படும் வினாவுக்கு விடையாக வரும் சொல்லே செயப்படுபொருள் ஆகும். செயப்படுபொருள் என்பது எழுவாயினால் செய்யப்படுகின்ற பொருளாகும். இஃது இரண்டாம் வேற்றுமை உருபினை ஏற்று வரும். சில தொடர்களில் செயப்படுபொருள் இல்லாமலும் வரும்.
—
எடுத்துக்காட்டு 1
குயவன் பானை வனைந்தான்
இத்தொடரில் குயவன்
எழுவாய், பானை
―
செயப்படு பொருள், வனைந்தான்
பயனிலை.
எதனைச் செய்தான் என்னும் வினாவிற்குப் பானை என்னும் சொல் விடையாகக் கிடைக்கிறது.