76
தமிழைப் பிழையின்றி எழுதுவோம்
இவ்வாறு செயப்படுபொருள் பெற்றுவரும் வினைச் சொற்களைச் "செயப்படுபொருள் குன்றா
வினை" என அழைப்பர்.
எடுத்துக்காட்டு - 2
பனை விழுந்தது
இத்தொடரில் பனை
―
எழுவாய், விழுந்தது - பயனிலை. செயப்படுபொருள் இல்லை. இவ்வாறு செயப்படுபொருள் இல்லாமலும் ஒருதொடர் வரலாம். இவ்வாறு செயப்படுபொருள் பெறாத வினைச் சொற்களைச் "செயப்படுபொருள் குன்றியவினை" என அழைப்பர்.
3.4 தொடர் அமைப்பு
எழுவாய்
செயப்படு பொருள்
பயனிலை
அம்மா
பாடல்
பாடுகிறார்
யாழினி
படம்
வரைகிறாள்
ஆனந்தி
பள்ளி
செல்கிறாள்
3.5 தொடரமைப்பு சிறப்பு
எழுவாய் – செயப்படுபொருள் - பயனிலை
நான் பாடத்தைப் படித்தேன்
செயப்படுபொருள் - எழுவாய் - பயனிலை
பாடத்தை நான் படித்தேன்
பயனிலை – எழுவாய் - செயப்படுபொருள்
O படித்தேன் நான் பாடத்தை
-
எழுவாய் – பயனிலை - செயப்படுபொருள்
நான் படித்தேன் பாடத்தை
―
செயப்படுபொருள் - பயனிலை எழுவாய்
பாடத்தைப் படித்தேன் நான்