தமிழைப் பிழையின்றி எழுதுவோம்
77
இவ்வாறான தொடர் சிறப்பு என்பது தமிழ்மொழிக்கு மட்டுமே உரிய சிறப்பாகக் கருதப்படுகிறது. வேறெந்த மொழிக்கும் இச்சிறப்பு இல்லை. ஆயினும் தமிழில் எல்லாத் தொடர்களையும் இவ்வாறு மாற்ற இயலாது.
எ.கா. பறவைகள் இரை தேடின.
தொடர் அல்லது சொற்றொடரை அதன் அமைப்பு அடிப்படையில் மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம். அவை பின்வருமாறு,
தொடர் அமைப்பு
1. கருத்துவகை
செய்தித் தொடர் வினாத் தொடர் விழைவுத் தொடர் உணர்ச்சித் தொடர்
II.அமைப்புவகை
தனிநிலைத் தொடர் தொடர்நிலைத் தொடர்
அல்லது கூட்டுத் தொடர்
III.வினாவகை
உடன்பாட்டு வினைத் தொடர்
எதிர்மறைத் தொடர் செய்வினைத் தொடர்
செயப்பாட்டுவினைத் தொடர்
கலவைத் தொடர்
தன்வினைத் தொடர்
பிறவினைத் தொடர்
நேர்கூற்றுத் தொடர்
அயற்கூற்றுத் தொடர்
3.5.1 கருத்துவகைத் தொடர்கள்
கருத்துவகைத் தொடரை நால்வகையாகப் பிரிக்கலாம். அவை பின்வருமாறு,
3.5.1.1 செய்தித் தொடர்
ஒரு செய்தியைத் தெளிவாகக் கூறும் தொடர் செய்தித் தொடர் எனப்படும்.
எடுத்துக்காட்டு
கம்பர் இராமாயணத்தை இயற்றினார்
இராஜராஜன் தஞ்சைப் பெரிய கோவிலைக் கட்டினான்
முதல்வர் துபாய் சென்றார்
செழியன் அயராது படித்துத் தேர்வில் வெற்றி பெற்றான்
கண்ணதாசன் சிறுகூடல்பட்டியில் பிறந்தார்
3.5.1.2 வினாத் தொடர்
வினாப் பொருளைத் தரும் தொடர் வினாத்தொடர் எனப்படும். அதாவது, என்ன? ஏன்? எங்கு? எவ்வாறு? யார்? போன்ற வினாக்களுக்கு விடையாக வரும் தொடர் வினாத் தொடராகும்.