பக்கம்:தமிழைப் பிழையின்றி எழுதுவோம்.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78

தமிழைப் பிழையின்றி எழுதுவோம்







செழியா என்ன சாப்பிட்டாய்?

கவிதா நீ ஏன் நேற்று உடற்பயிற்சி செய்யவில்லை?

அமுதன் எங்கு வேலை செய்கிறான்?

இந்த இடத்தில் தவறு எவ்வாறு நடந்தது?

தொலைபேசியைக் கண்டுபிடித்தவர் யார்? அவர்தாம் தமிழ் ஆசிரியரா? இதைக் கூறியவர் யாரோ?

தமிழினி எங்கே செல்கிறாய்?

குணா பள்ளிக்குப் போவாயா?

வளவன் எங்கே சென்றான்?

3.5.1.3 விழைவுத் தொடர்

விழைவுத் தொடரை நால் வகையாகப் பிரிக்கலாம். அவை பின்வருமாறு :

விழைவுத் தொடர்

1.கட்டளை (ஏவல்) 2.வேண்டுகோள்

3.வாழ்த்துதல் 4.வைதல் (திட்டுதல்)

1. கட்டளைத் தொடர் (ஏவல்)

ஒருவர் மற்றொருவரைப் பார்த்து ஒரு செயலைச் செய்யும்படி கட்டளையிடுவது கட்டளைத் தொடர் எனப்படும்.

எடுத்துக்காட்டு

பாடம் படி.

இத்தொடர் ஆசிரியர், மாணவனைப் பார்த்துப் பாடத்தை நன்றாகப் படி எனக் கட்டளை இடுவதாக அமைந்துள்ளது. கட்டளைத் தொடரின் இறுதியில் கட்டாயம் முற்றுப்புள்ளி (.) வரவேண்டும்.

கதை சொல்

பள்ளிக்கூடத்திற்குப் போ.

விரைந்து வா.

விரைவாகச் செல்.

தொலைபேசியை எடு.

சொன்னதைக் கேள்.

> பார்த்து நட.