தமிழைப் பிழையின்றி எழுதுவோம்
79
- மெதுவாக உண்.
பாடத்தைக் கவனி.
2. வேண்டுகோள்
ஒருவர் மற்றொருவரைப் பார்த்து எனக்கு இந்தப் பொருளைத் தருக என வேண்டுவது வேண்டுகோள் தொடர் எனப்படும்.
எடுத்துக்காட்டு
> எனக்குப் பசிக்கிறது சோறு தருக.
> எனக்குத் தாகமாக இருக்கிறது தண்ணீர் தருக.
> எழுதுவதற்கு எழுதுகோல் தருக.
> படிக்கத் தமிழ் நூல் தருக.
வசிக்க இடம் தருக.
இத்தொடர்களில் தருக எனும் சொல் வேண்டுதல் பொருளில் அமைந்துள்ளது. வேண்டுகோள் தொடரின் இறுதியில் முற்றுப் புள்ளி(.) இட வேண்டும்.
3. வாழ்த்துதல்
ஒருவர் மற்றொருவரைப் பார்த்து வாழ்த்தும் பொருட்டு அமையும் தொடர் வாழ்த்துதலாகும்.
எடுத்துக்காட்டு
மணமக்கள் பல்லாண்டு வாழ்க!
நீடூழி வாழ்க!
நோய், நொடியின்றி வாழ்க!
தமிழ் வாழ்க!
பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்க!
வாழ்த்துத் தொடரின் இறுதியில் ஆச்சரியக் குறி (!) சேர்ந்து வரவேண்டும்.
4. வைதல் (திட்டுதல்)
நமக்கு ஒரு செயல் பிடிக்காமல் இருக்கலாம். அல்லது நமக்குப் பிடிக்காத செயலை ஒருவர் செய்யலாம். அப்போது நாம் என்ன செய்வோம்? அவரைக் கடிந்துகொள்வோம் அல்லவா? அப்படிக் கூறுவதுதான் வைதல் அதாவது, திட்டுதல் எனப்படும்.
எடுத்துக்காட்டு
> கல்லாமை ஒழிக!
> மது ஒழிக!
> தீமை கெடுக!
வறுமை ஒழிக!