பக்கம்:தமிழைப் பிழையின்றி எழுதுவோம்.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82

தமிழைப் பிழையின்றி எழுதுவோம்







இதில் செழியன் என்பது எழுவாய் வரைந்தான் என்பது பயனிலை

இஃது ஓர் எழுவாய் ஒரு பயனிலைக் கொண்டு முடிந்த தனிநிலைத் தொடராகும்.

கவிதா பாடம் படித்தாள்.

சேகர் சிரித்தான்.

நேற்று வயலில் ஆடுகள் மேய்ந்தன.

பாம்பு படமெடுத்து ஆடியது.

இவை ஓர் எழுவாய், ஒரு பயனிலை அமைப்பு கொண்ட தனிநிலைத் தொடர்களாகும்.

செழியன், அமுதன், யாழினி மூவரும் பரிசு பெற்றனர்.

இதில் செழியன், அமுதன், யாழினி என்ற பெயர்கள் மூன்றும் எழுவாய்கள், பெற்றனர் என்பது பயனிலை. இது பல எழுவாய்கள் ஒரு பயனிலையைக் கொண்டு முடிந்த தனிநிலைத் தொடர் ஆகும்.

மா, பலா, வாழை என்பன முக்கனி.

காரி, பாரி, ஓரி முதலானோர் வள்ளல்கள் ஆவர்.

கோப்பெருஞ்சோழனும் பிசிராந்தையாரும் சிறந்த நண்பர்கள். சிவகங்கை, இராமநாதபுரம், புதுக்கோட்டையில் கன மழை.

பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுப்பு.

இவை பல எழுவாய்கள், ஒரு பயனிலை அமைப்பு கொண்ட தனிநிலைத் தொடர்களாகும்.

3.5.2.2 தொடர்நிலைத்தொடர் அல்லது கூட்டுத்தொடர்

ஓர் எழுவாய் பல பயனிலைகளைப் பெற்று வருவது தொடர்நிலைத்தொடர் அல்லது கூட்டுத்தொடர் எனப்படும்.

எடுத்துக்காட்டு

தமிழர்கள் கொடைப்பண்பில் சிறந்தவர்கள்; வந்தாரை வாழவைக்கும் பண்பாளர்கள்; ஒழுக்கத்தை உயிரினும் மேலாக மதிப்பவர்கள்.

இதில் 'தமிழர்கள்' என்னும் எழுவாய், சிறந்தவர்கள்; பண்பாளர்கள்; ஒழுக்கத்தை மதிப்பவர்கள் ஆகிய பல பயனிலைகளைக் கொண்டு முடிகிறது. ஓர் எழுவாய் தொடர்ந்து வந்து பல பயனிலைகளுடன் கூடுவதால் இது தொடர்நிலைத்தொடர் அல்லது கூட்டுத்தொடர் எனப்படும்.

வினைமுற்று, எழுவாய்க்குப் பயனிலையாய் உணர்த்தும்; திணை, பால், எண் இடங்களைக் காட்டும்.

அமையும்; முக்காலத்தில் ஒன்றை

(எ.கா.) ஜோதி முனைவர் பட்டம் பெற்றாள். இதில் 'பெற்றாள்' என்பது வினைமுற்று. இஃது உயர்திணை, பெண்பால், ஒருமை, படர்க்கை இடம் ஆகியவற்றைச் சுட்டுகிறது.