தமிழைப் பிழையின்றி எழுதுவோம்
83
எதிர்த்தவர்;
மூடநம்பிக்கைகளை முறியடித்தவர்;
பெரியார் சமூக முரண்களை தொலைநோக்குப் பார்வையுடையவர்; பகுத்தறிவுக்குப் பொருந்தாதவற்றை அறவே ஒதுக்கியவர்; சமூக மாற்றத்தை விரும்பியவர்; பெண்கள் சமூகத்தின் கண்கள் எனக் கருதியவர்; பெண்களை அடிமைத்தனத்திலிருந்து மீட்டவர். (இதில் பெரியார் என்பது எழுவாய்)
மாதவி படித்தாள்; முதல் மதிப்பெண் பெற்றாள்; தங்கப்பதக்கம் வென்றாள்; நாளிதழுக்கும் தொலைக்காட்சிக்கும் பேட்டியளித்தாள். (இதில் மாதவி என்பது எழுவாய்)
3.5.2.3 கலவைத் தொடர்
ஒரு தனிநிலைத் தொடரானது ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட துணைத் தொடர்களுடன் கலந்து வருவது கலவைத் தொடர் எனப்படும்.
கலவைத் தொடரில் உள்ள தனிநிலைத் தொடரானது துணைத் தொடர் அல்லது சார்புத் தொடர் இல்லாதபோதும் பொருள் முற்றுப்பெறும்; தனித்து இயங்கும் தன்மை கொண்டது.
இதில் வரும் துணைத் தொடர் முற்றுப்பெறாமல் நிற்கும்; தனிநிலைத் தொடரின் பொருளுக்குத் துணையாக நிற்கும்; இது தனித்துச் செயல்படாது.
எடுத்துக்காட்டு
சென்னையில் கனமழை பெய்ததால் ஏரி, குளங்கள் நிரம்பின.
இதில் "ஏரி, குளங்கள் நிரம்பின" என்பது தனிநிலைத் தொடராகும்.
"கனமழை பெய்ததால்" என்பது துணைத் தொடராகும்.
எவர், இரவும் பகலும் அயராது படிக்கிறாரோ, அவரே நல்ல மதிப்பெண் பெறுவர். இதில் "அவரே நல்ல மதிப்பெண் பெறுவர்" என்பது தனிநிலைத் தொடராகும். "எவர், இரவும் பகலும் அயராது படிக்கிறாரோ" என்பது துணைத் தொடராகும்.
3.5.3 வினைவகைத் தொடர்
வினைவகைத் தொடர்களை எட்டு வகையாகப் பிரிக்கலாம் அவை பின்வருமாறு:
வினைவகைத் தொடர்
1. உடன்பாட்டுவினைத் தொடர்
2. எதிர்மறைத் தொடர்
3. செய்வினைத் தொடர்
4. செயப்பாட்டுவினைத் தொடர்
5. தன்வினைத் தொடர்
6. பிறவினைத் தொடர்
7. நேர்கூற்றுத் தொடர்
8. அயற்கூற்றுத் தொடர்