பக்கம்:தமிழ்க்கடல்-இராய.சொ.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 தொகுப்பு நூல்கள் தமிழ்க்கடல் இராய.சொ. வாழ்வில் தொகுப்பு நூல்கள் பகும் பங்கு பெறுகின்றன. கடல் அலைவீசுவது போல் மிழ்க்கடலின் அலை செட்டி தாட்டுப் பட்டிதொட்டி முதலிய பல பகுதியில் வீசுவதால் தமிழ் இலக்கிய உணர்வும், பக்தி உணர்வும் எழுவதற்குக் காரணமாக அமைந்தது என்று கருதலாம். பெரும்பாலும் நகரத்தார் பெருமக்கள் சைவ சமயத்தைச் கடைப் பிடிப்பவர்கள். பெரும்பாலும் அக்குலத்தைச் சார்ந்த இக்கால இளைஞர்கள் தம் நடையுடை பாவனையில் காலத்திற் கேற்ப மாறுபடினும், முதியவர்கள் நெற்றியில் திருநீற்றுப் பட்டையும் சந்தனப் பொட்டும் திகழ்வதைக் காணலாம். ஆயினும் இளைஞர்களின் புறக்கோலம் மாறுபடினும், பக்தி உணர்வுக்கும் தமிழ் உணர்வுக்கும் அவர்களிடம் குறைபாடு இல்லை. மேலும் வைணவ சமயத்திலும் வைணவ இலக்கியத்திலும் சிறிதளவும் காழ்ப்புணர்வும் எதிர்ப்பு நோக்கும் காண முடியாது. மாறாக, அவற்றில் ஈடுபாடும் ஆர்வமும் காண முடிகின்றது. செட்டி நாட்டுப் பகுதியில் செல்வர்கள் இல்லத்தில் நடைபெறும் திருமணம், புதுமை, மணிவிழா முதலிய நிகழ்ச்சிகள் நடைபெறும்பொழுது வருகை புரிபவர்கட்கு நூல்களை அன்பளிப்பாக வழங்கும் மரபு இருந்து வருகின்றது. அந்தந்த நிகழ்ச்சிக்கு ஏற்பப் பொருத்தமான நூல்களைத் தொகுத்து அச்சிட்டுத் தரும் பொறுப்பு, தமிழ்க் to . t