பக்கம்:தமிழ்க்கடல்-இராய.சொ.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகுப்பு நூல்கள் 99 கடலிடம்தான் இருக்கும். இராய.சொ. வாழ்வில் இவ்வாறு வழங்கிய நூல்கள் இருபத்து ஒன்று உள்ளன. இவற்றைக் கடலில் கிடைக்கும் முத்துக்கள் போலத் தமிழ்க்கடல் தந்த இலக்கிய முத்துகள் எனக் கருதலாம். இவையே செட்டி நாட்டுப் பகுதிகளில் அணையா விளக்குகள் போலத் தமிழ் உணர்வையும் பக்தியுணர்வையும் குன்றாமல் வைத்துள்ளன என்று கருதலாம். அவற்றை சண்டுக் காட்டுவேன். 1. தேனும் அமுதும்: இஃது ஒர் அற்புதமான தொகுப்பு. 'திருவாசகத்தில் மொத்தப் பதிகம் 51 பாடல்கள் 6:58, திருவாசகத்தில் தேன்' என்ற சொல் 5 இடங்களிலும் 'அமுது என்ற சொல் 102 இடங்களிலும் உள்ளன. அதாவது பதிகத்திற்கு ஒரு தேன்; பதிகத்திற்கு இரண்டு அமுது. இத்தொகுப்பு நூல் தேனும் அமுதும் முழுதும் சேர்ந்த 134 திருப்பாடல்களைக் கொண்டது. இவற்றுள் தேனும் அமுதும் கலந்த 130 முழுப் பாடல்கள்: நான்கு பெரிய பாடல்களின் பகுதிகள், இக்கையடக்க நூலில் அடங்கி யுள்ள பாடல்கள் மனனம் செய்து அதுபவிக்கத்தக்கவை. இப்படி அதுபவித்தால் மணிவாசகப் பெருமான் உண்டு களித்த தேனை - அதாவது - நினைத்தொறும் காண்தொறும் பேசுந்தொறும் எப்போதும் அனைத்தெலும்பும் உள்நெக ஆன்ந்தத் தேனை (217) நாமும் மாந்தி அநுபவிக்கலாம். திருவாதவூரரின் பக்திக் கடலில் திளைத்த நம் தமிழ்க் கடல் தொகுத்தளித்த நூலில் உள்ள பாடல்கள் அனைத்தும் ஆழ்வார் கூறுவது போல தேனாக, பாலாக, கன்னலாக அமுதாகத் தித்திக்கும் - நாவுக்கு அல்ல, மனத்திற்கு. 1. காரைக்குடி முத்த.வெ. சொக்கலிங்கம் செட்டியார் மகன் செல்வன் நாச்சியப்பனின் திருமண அன்பளிப்பு (5-9-1955).