பக்கம்:தமிழ்க்கடல்-இராய.சொ.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190 தமிழ்க்கடல் ராயசொ 2. காதற்பாட்டு’. இந்நூல் தமிழ் இலக்கியங்களில் காதல் துறையில் (அகத்துறையில் அமைந்த 130 இனிய பாக்களைத் தன் அகத்தே கொண்டு திகழ்வது. சொற்சுவை பொருட்கவை கொப்பளித்து நிற்கும் பாடல்கள் இவை. "காதற்பாட்டு' என்ற நூலைப் பற்றிக் கூறுவதற்கு முன்னர் அறிவியல் நோக்கில் ஒரு முக்கியக் கருத்தைச் சொல்ல விழைகின்றேன். நமது உடல் உயிரணுக்களால் ஆனது. ஒவ்வொரு உயிரணுவிலும் இரட்டை நிறக் கோல்கள் (x,y என்பது போல் உள்ளன. ஆனால் ஆணின் விந்தனுக்களிலும், பெண்ணின் முட்டையணுவிலும் ஒன்றை திறக்கோல்கள் (x, x, y என்பது போல் உள்ளன. இவை குழந்தைப் பருவத்தில் பக்குவப்படாத நிலையில் உள்ளன. அஃதாது இயக்கமில்லாத (dormat) நிலையில் உள்ளன. இவை ஆணின் முன் - குமரப் பருவத்திலும், பெண்ணின் பூப்பெய்தும் பருவத்திலும் வளர்ச்சியடைந்து இயங்கும் நிலையை எய்துகின்றன. இந்த இரண்டு வித ஒற்றையணுக்கள் ஒன்று சேர்ந்தால்தான் ஒரு புதிய உயிர் தோன்றும் இயங்கும் நிலையிலுள்ள இந்த இரண்டு வகை உயிரணுக்கள் ஒன்று சேர்வது எப்படி? இந்த இயக்கம் இரு பாலாரிடமும் காதலாக மலர்கின்றது. கலவி திகழ்கின்றது. இந்த அணுக்கள் இரண்டும் கருக்குழலில் (Fellopian tube) சந்தித்து இணைகின்றன. இணைந்த அணு சிறிது சிறிதாக தகர்ந்து சென்று கருப்பையின் சுவரில் பதிந்து குழந்தையாக வளர்ச்சி பெறுகின்றது. எல்லா உயிர்க்கும் இது பொருந்தும். எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது தானமர்ந்து வரூஉம் மேவற் றாகும்.” என்று ஒல்காப் பெரும்புகழ்த் தொல்காப்பியரின் நூற்பா குறிப்பிடுவதாகக் கருதலாம். இதுவே அக இலக்கியத்தின் தோற்றுவாய் ஊற்றுவாயாகச் செயற்படுவது. 2. இது ஆத்தங்குடி கா.அரு.கா. காடப்ப செட்டியார் மகள் செல்வி மீனாள் திருமண மலராக வெளியிடப் பெற்றது. (23-5-1958). 3. தொல், பொருள். பொருளியல் - 27 இனம்).