பக்கம்:தமிழ்க்கடல்-இராய.சொ.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகுப்பு நூல்கள் 101 அக இலக்கியம்: சங்கத் தமிழ்ப்பாடல்களின் தொகை 238. அவற்றுள் அகத்தினை துதலியவை 1862, இவற்றைப் பாடிய 173 சங்கச் சான்றோர்களுள் அகம் பாடியவர்கள் மட்டிலும் 378 பேர்கள். அகப்பாடல்களின் மிகுதியான எண்ணிக்கையும், அப்பாடல்களைப் பாடியவர்களின் மிகுதியான தொகையும் அகத்திணையின் சிறப்பையும் ஒருவாறு தெரிவிக்கின்றது. அகப்பாடல்களின் தொகையும் பாடினோர் தொகையும் புறத்தினைப் பாடல்களின் தொகையினும் பாடினோர் தொகையினும் மும்மடங்கு மிக்கிருத்தலைக் காணலாம். இதனால் சங்க புலவர்கள் அகம் பாடுவதையே சிறந்த புலமையென மதித்திருந்தனர் என்பது புலனாகின்றது. திணை என்பது ஒழுக்கம், ஐந்து நிலங்களில் வாழும் மக்களின் காமக் குறிப்பினைச் சிறப்பிப்பதாகும். இக்காமக் குறிப்பு பல்வேறு கட்டங்களில் நிகழும். அக்கட்டங்களில் நிகழும் நிகழ்ச்சியைத் துறை என்று குறிப்பிடுவார். சங்ககாலத்தில் தோன்றிய பாடல்கள் தனித்தனித் துறைகளாக, தனித்தனிப் புலவர்களால் பாடப் பெற்றவை. பிற்காலத்தில் தோன்றிய கோவை நூல்கள் ஒருவரால் பாடப் பெற்றவை. ஆதலால் திணை துறைகளைத் வகுத்தும் தொகுத்தும் பாடப் பெற்றுள்ளன. இக்கோவை நூல்களில் காலத்தால் முற்பட்டது மணிவாசகப் பெருமான் அருளிய திருக்கோவையார். இதில் 400 துறைகள் உள்ளன. பிற்காலத்தில் எழுந்த கோவை நூல்களில் 100க்கு மேற்பட்ட துறைகளும் அமைந்துள்ளன. தமிழ்க்கடல் இராய.சொ. அவர்கள் தொகுத்த "காதற்பாட்டில் சங்கப்பாடல்கள் சிலவும் கோவை நூல்களில் உள்ள பாடல்கள் பலவுமாக அடங்கியுள்ளன. இந்த நூலின் நூல்முகம் அனைத்தையும் அற்புதமாக விளக்குகின்றது. 400க்கு மேற்பட்ட துறைகளில் சிறப்பாக அமைந்திருப்பது ஒன்று 'பாலனைப் பழித்தல்' என்ற துறையாகும். இதில் ஆறு பாடல்களைக் காட்டுவார் தமிழ்க்