பக்கம்:தமிழ்க்கடல்-இராய.சொ.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 தமிழ்க்கடல் ராயசொ கடல். ஆறும் சொல்நயம், பொருள் நயம் மிக்கவை. அவற்றுள் ஒன்று: அரும்பால கா! முனம் பூமணச், சொற்பொருள், ஆகம்.உயிர். கரும்பாம் சுவை, எள்ளும் எண்ணெயும் போலொத்த காதலரைப் பெரும்பாலில் நல்அன்னம் கங்கா சலத்தைப் பிரிப்பதுபோல் சுரும்பாம், புலவர் யமன், ஆலை செக்கெனத் தோன்றினையே (121) என்பது. ஒரு தாய் தான் ஈன்றெடுத்த செல்வனை நோக்கிப் பேசுவது: "அருமையான மகனே, அந்த நாளில் (நீ பிறப்பதற்கு முன் நானும் உன் தந்தையும் பூவும் மணமும் போல் - சொல்லும் பொருளுமாக - உடம்பும் உயிரும் என்ன, கரும்பும் அதில் பொருந்தியுள்ள சுவையும் போல, - எள்ளும் அதனுள் இருக்கும் எண்ணெயும் என்று சொல்லும்படி - பிரியா இயல்பு கொண்டு வாழ்ந்திருந் தோம், நீரைவிட்டுப் பாலைப் பிரித்தெடுக்கும் அன்னப் பறவை போல் நீ வந்து தோன்றினாய் எங்களைப் பிரிப்பதற்கு பூவும் மணமுமாக இருந்த எங்களைப் பிரிக்க நீ வண்டாக வந்தாய்; சொல்லும் பொருளுமாக இருந்த எங்களை வேறுபடுத்த நீ புலவனாக வந்தாய்; உடலையும் உயிரையும் பிரித்தெடுக்கும் எமனாக வந்து விட்டாய்: கரும்பையும் அதன் சுவையையும் தனியாக்கும் ஆலையென வந்துள்ளாய்; எள்ளைவிட்டு எண்ணெயை நீக்கும் செக்காக நீ வந்து தோன்றினாய்" என்கின்றாள். இந்நூலில் அசதிக் கோவையிலுள்ள ஒருபாடல் () நெஞ்சைக் கவரும் தன்மையுடையது. 'தாய் இரங்கல்' துன்றயில் வருவது. அற்றானைத் தாங்கிய ஐவேல் அசதி, அணிவரைமேல்