பக்கம்:தமிழ்க்கடல்-இராய.சொ.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகுப்பு நூல்கள் 103 முற்றா முகிழ்முலை; எவ்வாறு சென்றனள்? முத்தமிழ்நூல் கற்றார் பிரிவும்:கல் லாதார் இணக்கமும் கைப்பொருள் ஒன்று அற்றார் இளமையும்; போலே கொதிக்கும் அருஞ்சுரமே (71) "ஏதும் இல்லாரைக் காப்பாற்றுகின்ற அசதி என்னும் பிரபுவின் அழகிய மலையினிடத்தே, முதிராத கூம்பிய தனத்தையுடைய என் மகள், எப்படி நடந்தாளோ? பாலை வனத்தைக் கடந்து சென்றிருப்பாளே! அது கொதிக்குமே! எப்படிக் கொதிக்கும், தெரியுமா? முத்தமிழ் வல்ல வித்தகரைப் பிரித்தால் உள்ளம் எப்படிக் கொதிக்குமோ அப்படியல்லவா பாலை நிலம் கொதிக்கும்; கல்லா தாரோடு சேர்ந்து வாழ்தல் எவ்வாறு சுடுமோ அவ்வாறல்லவா அருஞ்சுரம் சுடும். கையில் பணம் இல்லாதவனுடைய இளமைப் பருவம் ஒன்றையும் நுகர வொட்டாமல், எங்ங்ணம் அனலாகக் கொளுத்துமோ, அங்ங்னமன்றோ பாலை நெருப்பைக் கக்கும். அப்படிப் பட்ட அருஞ்சுரத்தில் என்சிறு பெண் - முற்றா முகிழ்முலை - எவ்வாறு சென்றனள்?” என்று கேட்கின்றார் அசதிக் கோவை ஆசிரியர். 3. மாதவமாலை". இத்தொகுப்பு நூல் திருமால் துதியாக 5 பாடல்களைக் கொண்டது. திருமாலுக்கு ‘மாதவன்' என்ற பெயரும் உண்டு. ஆதலால் இது மாதவ மாலை' என்ற பெயர் பெற்றது. செட்டிநாட்டுப் பெருமக்கள் அரனைப் போல் அரியையும் வழிபடு தெய்வமாகக் கொண்டவர்கள் என்பதற்கு இந்நூல் ஒர் எடுத்துக்காட்டு. இதில் வில்லிபாரதத்தில் கண்ணன் துதியாக வரும் 41 பாடல்களும், பெருந்தேவனார் பாரதத்தில் திருமால் துதியாக வரும் 7 பாடல்களும், 4. இலக்குமி - மாதவன் காப்புக் கட்டும் புதுமை (20-1-64). வெளியிட்டது அபிசீனியா. பழ. நாச்சியப்பன்.