பக்கம்:தமிழ்க்கடல்-இராய.சொ.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 தமிழ்க்கடல் ராயசொ இளங்கோ அடிகள் திருமாலைப் பற்றிப் பாடியுள்ள பாடல்கள் மூன்றும் அடக்கம். இராய.சொவுக்கு அவர்தம் நிழல்போல் தொடர்ந்து தோழனாக அமைந்து பணியாற்றியவர் அபிசீனியா பழ. நாச்சியப்பன். புலவர் பெருமானை ஒரு தெய்வம்போல் பாராட்டியவர். தளபதி போல் சேவை செய்தவர். இவர் தம் மகன் திருநாவுக்கரசு மூலம் பெற்ற மூன்று பெயரர்கட்கும் மாதவன்', 'கேசவன்', 'இராகவன் என்ற பெயர்கள் சூட்டி மகிழ்ந்தவர். மூத்த பெயர்த்திக்கும் இலக்குமி என்ற பெயரிட்டு மகிழ்ந்தவர். மூத்த பெயரன் மாதவனின் புதுமையில் வழங்கப்பெற்றதால் நூற் பெயரும், விழா நாயகன் பெயருடன் பொருந்தியது. இறைவனது திருக்குறிப்புபோல் அமைந்து விடுகின்றது; நூலும் பொலிவும் பெருமையும் பெற்றுத் திகழ்கின்றது. தேடிய அகலிகை சாபம் தீர்த்ததாள்; நீடிய உலகெலாம் அளந்து நீண்டதாள்; ஒடிய சகடுஇற உதைத்தும் பாம்பின்மேல் ஆடியும் சிவந்ததாள் என்னை ஆண்டதாள் என்ற பாடல் இவற்றுள் அற்புதமாக அமைந்து எவர் மனத்தையும் கவர்வதாக உள்ளது! 4. அண்ணாமலை இந்த அரியநூல் திருவண்ணாமலைப் பெருமானைப் புகழ்ந்து பாடப் பெற்ற 5 பாடல்களைக் கொண்டது. இவற்றுள் மணிவாசகப் பெருமான் அருளிய திருவாசகத்தில் உள்ளவை 2 பாடல்கள்; சம்பந்தர் தேவாரத்தில் உள்ளவை 10 பாடல்கள்; அப்பர் தேவாரத்தில் உள்ளவை 15 பாடல்கள்; சேக்கிழார் பெருமான் அருளியுள்ள பெரிய புராணத்தில் உள்ளவை 6 பாடல்கள்; வில்லி பாரதத்தில் உள்ளது ஒன்று: 5. காரைகுடி சா.நா.அ.சொ. அண்ணாமலையார் தன் மகன் செல்வன் விகவநாதன் திருமண வெளியீடாக வெளியிட்டது. (29-6-1964).