பக்கம்:தமிழ்க்கடல்-இராய.சொ.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகுப்பு நூல்கள் 9 105 குகை நமச்சிவாயரின் தனி வெண்பா 2; குரு நமச்சிவாயரின் அருணகிரி அந்தாதியில் உள்ளவை 13 பாடல்கள்; சைவ எல்லப்ப நாவலரின் அருணாசல புராணத்தில் உள்ளவை 2 பாடல்கள்; ஆக 51 பாடல்கள் அண்ணாமலைப் பெருமானைப் பற்றிய பாடல்களாதலால் நூல் ‘அண்ணாமலை மாலை' என்று பெயர் பெற்றிருப்பது ஒரு சிறப்பு. இதனை வெளியிட்டவர் அண்ணாமலையார் என்று அமைத்தது மற்றொரு சிறப்பு. பாடல்கள் அனைத்தும் அண்ணாமலை எம்பெருமான் அடிக்கமலம் சென்று இறைஞ்சும் அரிய பாடல்களாக அமைந்துள்ளன. இந்தத் தொகுப்பை ஆழ்ந்து நோக்கும்போது தமிழ்க் கடலின் பரந்த நூலறிவு, அவர்தம் பக்தி உணர்வு கலந்த துண்ணறிவு, தேடித் திரட்டிய முயற்சி ஆகியவை நன்கு புலனாகின்றன. . 5. தில்லைத் திருநடம்" தில்லைக் கூத்தப் பெருமான் மீது பல அடியார்களால் பாடப் பெற்ற 10 திருப்பாடல் களைக் கொண்டது. இத்தொகுப்பு நூல். பன்னிரு திருமுறையும் இந்நூலில் இடம் பெற்றிருப்பது இந்நூலின் தனிச்சிறப்பாகும். இத்திருமுறை பாடல்கள் மட்டும் 85. இவற்றுள் ஒன்பதாம் திருமுறையில் மட்டும் 30 பாடல்கள் தேர்ந்தெடுக்கப் பெற்றுள்ளன. இந்த ஒன்பதாம் திருமுறைப் பாடல்கள் திருவாசகப் பாடல்கள்போல் இனிப்பவை. இவை ஒன்பதின்மரால் பாடப் பெற்றவை. ஆசிரியர் வரிசைப்படி நோக்கினால் மணிவாசகப் பெருமானின் பாடல்களே அதிகமானவை. அவர்தம் பாடல்கள் 18 சேக்கிழார் அடிகளின் பாடல்கள் 10; வள்ளல் பெருமானின் பாடல்கள் 10; அப்பரடிகளின் பாசுரங்கள் 9; பொன்னம்பல நாதனைப் பற்றிய வில்லிப்புத்துராழ்வாரின் பாடல் ஒன்று. மொத்தத்தில் 25 அடியார்களின் பாடல்கள் 6. காரைக்குடி "மெசெ" குடும்பத்தைச் சேர்ந்த மெ.செ.ச.மு.மெ. முத்துராமனார் தம் அருமந்த மகன் மெய்யப்பன் திருமண நினைவாக வெளியிடப் பெற்று அன்பர்கட்கு வழங்கப்பெற்றது.