பக்கம்:தமிழ்க்கடல்-இராய.சொ.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 தமிழ்க்கடல் ராயசொ இத்தொகுப்பு நூலில் அடங்கியுள்ளன. தமிழ்க் கடல் தமிழ் சைவ இலக்கியக் கடலில் மூழ்கி முத்தெடுப்பது போல் எடுத்தவை இந்த 10 பொறுக்கு மணிகள். இத்தொகுப்பு நூல் தமிழ்க் கடலின் ஆழ்ந்த புலமையையும் அரிய முயற்சியையும் எடுத்துக் காட்டுவதாக அமைந்துள்ளது. 6. நால்வர் வணக்க மாலை', ஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி, மணிவாசகப் பெருமான் ஆகிய சமயக்குரவர் நால்வர்மீது 16 அடியார்கள் பாடிய 8: பாடல்களைக் கொண்டது இத்தொகுப்பு நூல். உமாபதி சிவம் என்ற ஒருவரே நால்வர்பற்றிப் பாடியுள்ள ஒரே பாடல் இந்நூலின் முதற் பாடலாக அமைந்துள்ளது. தேவாரமணிகள் மூவர்பற்றிப் பதின்மூன்று அடியார்கள் பாடியுள்ள பாடல்களும் மணிவாசகர்பற்றிப் பதினைந்து அடியார்கள் பாடியுள்ள பாடல்களும் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. இன்னொரு முறையில் நோக்கினால் நால்வரும் தலா 20 பாடல்கள்வீதம் பெற்றுள்ளனர். நால்வரும் ஒரே பாடலில் அமைந்து திகழ்கின்றனர். நூலை ஆழ்ந்து நோக்கினால் தமிழ்க்கடல் இராய.சொ. இவற்றைத் தொகுக்கப் பட்ட அரும்பாடு தெளிவாகும். அவர்தம் ஆழ்ந்த புலமையும் பளிச்சிடும். 7. திருக்கானப்பேர் பாமாலை" கானப்பேர் என்பது காளையார் கோவில் இது பாண்டி நாட்டிலுள் தேவாரப் பதிகம் பெற்ற தலங்களுள் ஒன்று. இத்தலத்தில் மூன்று இறைவன் - இறைவியர் எழுந்தருளியுள்ளனர். 7. குன்றக்குடிக்கு அருகிலுள்ள ஆத்தங்குடி கா.அரு. பழ. பழநியப்ப செட்டியார் அவர்களின் மணிவிழா வெளியீடு (4-3-1963) 8. இத்தலம் இராமநாதபுரம் மாவட்டத்தில் நாட்டரசன் கோட்டை இருப்பூர்தி நிலையத்தினின்றும் 10 கல் தொலைவில் உள்ளது. சிவகங்கை - தொண்டி பெரு வழிச் சாலையில் சிவகங்கையினின்றும் 11 கல் தொலைவில் உள்ளது. இத்தலத்தில் வேதாந்த மடம் ஒன்று உள்ளது. நகரத்தாருக்கு இத்தலத்தில் பல அறச்சாலைகள் உள்ளன.