பக்கம்:தமிழ்க்கடல்-இராய.சொ.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகுப்பு நூல்கள் 107 காளீசர் - சொர்ணவல்லி சோமேசர் - செளந்திர நாயகி சொக்கேசர் - மீனாட்சி இத்தலத்து இராசகோபுரம் மிகப் பெரியது. மருது பாண்டியன் கட்டியது. இது சோமேசர் சந்திதிக்கு எதிரில் உள்ளது. கோயிலை ஒட்டி வேதாந்த மடம் ஒன்று உள்ளது. நகரத்தாருக்கு இத்தலத்தில் பல அறச்சாலைகள் உள்ளன. மிகப்பெரிய தெப்பக்குளம் ஒன்று உள்ளது. இத்தலத்திற்குத் திருஞானசம்பந்தர் தேவாரப் பதிகம் (3:26) ஒன்றும் சுந்தர மூர்த்தியின் தேவாரப் பதிகம் (7:84) ஒன்றும் உள்ளன. அப்பர் பெருமானின் பதிகம் இல்லாவிடினும் அவர்தம் ஒன்பது பாடல்களில் இத்தலம் குறிக்கப் பெறுகின்றது. இத்தலத்துப் பாடல்களைத் தொகுத்தவர் சிவநெறிச் செல்வர் அழ.அரு.ராம.வே. சோம நாராயணன். பொருள் எழுதியது தமிழ்க்கடல் இராய.சொ. இந்நூல் 52 திருப்பாடல்களைக் கொண்டது. இராய.சொ. இதனை அறுதியிடவில்லை) இந்நூலை வெளியிட்டவர் காளையார் கோயிலில் பசுமடம் நிறுவி அறப்பணி புரிந்து வரும் தேவகோட்டை சொமெ.பழ. குடும்பத்தைச் சேர்ந்த சோம. சோமசுந்தரனார். 8. இராகவன் இசைமாலை', ஈண்டு இசை என்பது "புகழ்' என்ற பொருளில் வந்தது. இந்நூல் இராம காதையில் கம்பன் இராமர் தோத்திரமாகப் பலர் வாயில் வைத்துப் பேசும் பாடல்களின் தொகுப்பு. இத்தொகுப்பால் கம்பனில் அவ்வாறு அமைந்த 108 பாடல்களும் குலசேகரப் பெருமாளால் இராமனைப் பற்றி அருளப் பெற்ற 22 பாசுரங்களும் இரண்டு பதிகளும்" அடங்கியவை. கம்பன் 9. காரைக்குடி ராம்.வெ.ராம். திருநாவுக்கரக் மகள் உமையாள் புதுமை வெளியீடு (20-4-1969) 10. பெரு.திரு. 8, 10.