பக்கம்:தமிழ்க்கடல்-இராய.சொ.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகுப்பு நூல்கள் 109 முருகப்பெருமான் மீது நக்கீரர் (திருமுருகாற்றுப் படை) சேந்தனார் (9-ஆம் திருமுறை), பெருந்தேவனார் (குறுந்தொகை, அருணகிரி நாதர், திருத்தணிகை சந்நிதி முறை, பரஞ்சோதி முனிவர், சிவஞான சுவாமிகள், இலிங்கபுராணம், சைவ எல்லப்ப நாவலர், வள்ளலார் ஆகியோரின் திருவாக்குகள் அடங்கியுள்ளன. சிவபெருமான்மீது மணிவாசகப் பெருமான், நாவுக்கரசர், திருஞான சம்பந்தர், சுந்தரமூர்த்தி, கருவூர்த் தேவர், திருமாளிகைத்தேவர், காரைக்கால் அம்மையார், பட்டினத்து அடிகள், தாயுமான அடிகள், சேக்கிழார் பெருமான் ஆகியோரின் பாடல்கள் காணப்பெறுகின்றன. திருமால் வணக்கங்களாக நம்மாழ்வார், திருமங்கை மன்னன், பெரியாழ்வார், அன்னை ஆண்டாள், குலசேகர ஆழ்வார், திருமழிசையாழ்வார், தொண்டரடிப் பொடிகள், பொய்கையார், பூதத்தார், பேயார் ஆகிய ஆழ்வார்களின் பாசுரங்கள் அடங்கியுள்ளன. . மலைமகள் (பார்வதி வணக்கங்களாகப் பரஞ்சோதி, குமரகுருபரர் ஆகிய இருவருடைய பாடல்களும்; கலைமகள் (சரசுவதி வணக்கங்களாகக் குமரகுருபரர் பாடல்களும் அமைகின்றன. . இந்தப் பனுவலிலுள்ள பாடல்களனைத்தும் படித்து மனனம் செய்வதற்கு ஏற்றவை. 10. மீனாட்சி திருமணம்". 'மீனாட்சி திருமணம்' என்ற இந்தச் சிறிய பனுவல் அருமையான தொகுப்பு. பரஞ்சோதி முனிவர் திருவிளையாடற் புராணத்தினின்றும் தொகுக்கப் பெற்றது. திருவிளையாடற் புராணம் மதுரையில் எழுந்தருளியிருக்கும் சோமசுந்தரப் பெருமானின் 64 திருவிளையாடலைக் கொண்டது. இப்பெரியார் சற்றேறக் குறைய முந்நூறு ஆண்டுகட்கு முன்னே வாழ்ந்தவர். இவர் 12. காரைக்குடி சா.நா.அ.சொ. அண்ணாமலைச் செட்டியார் அருமைமகள் மீனாட்சித் திருமண வெளியீடு (11-9-1970).