பக்கம்:தமிழ்க்கடல்-இராய.சொ.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 % தமிழ்க்கடல் ராயசொ தென்சொல் கடந்து வடசொற்கடலுக்கும் எல்லை கண்டவர். இவர்தம் பாடல்கள் தேனும் பாலும் அமுதும் கன்னலும் தித்திக்கும் பிறவும் கலந்த தீஞ்சுவைப் பொருள்கள் என்பதற்கு எள்ளவும் ஐயம் இல்லை. இப்பெருமான் வெறும் இலக்கண இலக்கியம் மட்டும் தெளிந்தவர் அல்லர்; பல கலை விற்பன்னர், செம்மணி இலக்கணம் அனைத்தும் பேசுவார் (மாணிக்கம் விற்ற படலம்). நடனக் கலையை அப்படியே காட்டுவார் (கால் மாறி ஆடிய படலம்). இவர்தம் இசையறிவுக்கு எடுத்துக் காட்டாக அமைவது இசைவாது வென்ற படலம். குதிரையின் இலக்கணம் முழுவதும் நவில்வார் (நரிபரி ஆக்கிய படலமாக). இங்ஙனம் இவர் பல துறைகளைப் பழுதற ஓதி உணர்ந்தவர் என்பதை இவர்தம் நூலில் பரக்கக் காணலாம். இவர்தம் தெய்வப் பாடல்களில் பல நெஞ்சை நெக்குருகச் செய்யும் பான்மையவை. இதனை இத்தொகுப்பு நூலில் கண்டு படித்து அநுபவித்து மகிழலாம். திருவிளையாடற் புராணத்தின் பாடல் தொகை 3363. அவற்றுள் இச்சிறிய பனுலை அணிசெய்பவை 214. இந்த நூலில் மீனாட்சி திருமணத்திற்கு முன்னதாகப் பரஞ்சோதி திருவிளையாடலிலிருந்து இறைவணக்கம், அடியார் வணக்கம், பாண்டி நாட்டின் வளம், மதுரை நகரின் சிறப்பு, மீனாட்சிக்கு முடி புனைந்தது, அவள் அரசாட்சி, வெற்றி கொண்டது முதலிய பகுதிகளிலுள்ள அரிய பாடல்களும், மீனாட்சி திருமணத்தில் நிறைந்த பாடல்களும், திருமணத்தையொட்டி வெள்ளியம்பலத் திருக்கூத்து ஆடிய பகுதியும் குண்டோதரனுக்கு அன்னமிட்ட பகுதியும் வையையை அழைத்த பகுதியும், கொண்டு இறுதியாகத் திருமணம், புரிந்து கொண்டு மீனாட்சி உக்கிரகுமார பாண்டியனை மகனாகப் பெற பாடலோடு இந்நூல் நிறைவு பெறுகின்றது. பாடல்கள் யாவும் தமிழ்க்கடல் சுவைத்தவை; நாமும் சுவைக்கலாம்.