பக்கம்:தமிழ்க்கடல்-இராய.சொ.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகுப்பு நூல்கள் 113 தொல்லை இரும்பிறவிச் சூழும் தளைநீக்கி அல்லல்அறுத்து) ஆனந்தம் ஆக்கியதே - எல்லை மருவா நெறிஅளிக்கும் வாதவூர் எங்கோன் திருவா சகம்என்னும் தேன். என்ற திருவாசகச் சிறப்புப் பாயிர வெண்பாவின் அடியொட்டி அமைந்திருப்பதைக் கண்டு மகிழலாம். இனிப்புப் பொருள்களுள் சிறந்து விளங்குவது தேன். திருவாசகம் அருளிய மணிவாசகப் பெருமானுக்குத் தேனின்மீது அளவற்ற ஆசை. தேனாய் அமுதமாய்த் தித்திக்கும் சிவபெருமானைச் சுவைத்துச் சுவைத்து, மகிழ்ந்து மகிழ்ந்து அந்தம் இலா ஆனந்தம் பெற்றார் வாதவூர் அடிகளார். 658 திருப்பாடல்களைக் கொண்டது திருவாசகம். அதில் 300 திருப்பாடல்கள் இந்நூலில் அடங்கி யுள்ளன. தமிழ்க் கடலுக்கு திருவாசகமே சிவபெருமான் மாதிரி. அதனைச் சிவபெருமானாகவே வழிபடுவதும் உண்டு. இஃது ஒர் அருமையான பதிப்பு. சாதாரண மக்களும் எளிமையாகப் படித்து அறிந்து சுவைக்கத் தக்கவாறு பாடலில் உள்ள புணர்ச்சி விதிப்படி அமைந்துள்ள தொடர்களை இயன்ற அளவு பதம் பிரித்து அச்சிடப் பெற்றுள்ளமை இதன் தனிச்சிறப்பு. நாதன்றாள் - நாதன் தாள் ஒண்ணித்தில நகையாய் - ஒள்நித்தில நகையாய் சொற்கழிவு - சொற்கு அழிவு நாடோறும் - நான்தோறும் கன்னா ருரித்தென்ன - கல் நார் உரித்து என்ன என்றவாறு பிரித்து வெளியிடப் பெற்றுள்ளது.