பக்கம்:தமிழ்க்கடல்-இராய.சொ.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 தமிழ்க்கடல் ராயசொ ஏடு பார்த்து எழுதுவோரால் நேர்ந்த யாப்புச் சிதைவு ஏற்பட்டுள்ள சில பாடல்களை அவ்வகைச் சிதைவுகளைச் சீர் செய்து வெளியிட்டிருப்பது இன்னொரு தனிச்சிறப்பு. அவன் அருளாலே அவன்தாள் வணங்கி, சிந்தை மகிழச் சிவபுரா ணம்தன்னை என்பதில் யாப்புப் பிழை உள்ளது. இப்பாடல் கலிவெண்பா. வெண்பாவில் வெண்தளை தவறக்கூடாது. 'வணங்கி என்பது புளிமா, அடுத்த சீராகிய சிந்தை நேர் அசையில் தொடங்குகின்றது. வெண்பா இலக்கணப்படி மா முன் நேர் வருதல் கூடாது. எனவே ஒரு சிறு மாறுதல் செய்தால் சரியாகி விடுகின்றது. இங்கு, வணங்கி என்பதில் ஒரு 'ஏ' சேர்த்தால் போதும். 'வணங்கியே' என்று இருப்பதில் எவ்விதக் குறைபாடும் இல்லை. நான்ஆர் என்உள்ளம் ஆர். (20) என்ற பாடல் கலிப்பா ஆகும். கலிப்பா நான்கு சீர்கள் கொண்டு இருத்தல் வேண்டும். இப்பாடலில் பின் மூன்று அடிகளும் சரியாக நான்கு சீர்கள் கொண்டிருக்க முதல் سودانگه 'நானார்என் உள்ளமார் ஞானங்களார் என்னை யாரறிவார். என ஐந்து சீர் கொண்டு நீள்கின்றது. இதனை, 'நான்ஆர்என் உள்ளம்ஆர் ஞானம்ஆர் யார்அறிவார்' என மாற்றுவதில் கருத்துச் சிதையவில்லை; பாடலும் கட்டுச் செம்மையாகி விடுகின்றது. இத்தகைய 'சீர்திருத்தங்கள் பாடல்களில் செய்யப் பெற்றுள்ளமை, இந்நூலின் மற்றொரு தனிச்சிறப்பு. அன்பும் சிவமும்' ஒன்றாக இருப்பதைப் போல இராய.சொ.வும் திருவாசகமும் ஒன்றே என்று கருதும் அளவிற்கு தமிழ்க்கடல் திருவாசகத்தில் மூழ்கி முத்தெடுத்துக் கொண்டு இருப்பவர்கள்.