பக்கம்:தமிழ்க்கடல்-இராய.சொ.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகுப்பு நூல்கள் 115 பட்டினத்து அடிகள் சிவப்பிரகாச அடிகள், தாயுமான அடிகள் இராமலிங்க அடிகள் ஆகிய அருட் செல்வர்களால் பாராட்டி அருந்தப் பெற்ற மணிவாசகப் பெருமான் வார்த்த திருவாசகத் தேனைப் பருகிக் களித்து அந்தம் ஒன்று இல்லா ஆனந்தம் பெறுவது நம்மனோர் ól-@T. 14. ஆழ்வார் அமுது". 'திருவாசகத் தேனை அருளிய தமிழ்க்கடல் இப்போது ஆழ்வார் அமுது வழங்குகின் றார்கள். உரையுடன் வழங்கும் இத்தொகுப்பு நூல் ஜீராவில் தோய்ந்திருக்கும் குளோப் ஜாமூன். இனிப்புச் சாறில் மூழ்கி யிருக்கும் கல்கத்தா ரசகுல்லாபோல் படிப்பவர்கள் உணர்வார்கள் என்பது என் அதிராத நம்பிக்கை. இத்தொகுப்பு நூல் 18 ஆண்டுகட்கு முன்னர் வெளிவந்தது". அப்போது இது புதுக்கோட்டை ரிப்பன் அச்சகத்தில் அச்சிடப் பெற்றதாக நினைவு. அச்சக உரிமையாளர் திரு சக்தி செட்டியாருடன் உரையாடி மகிழ்ந்த காலம். இராய.சொ.வுடன் பார்வைப் படிவங் களைச் சரிபார்க்க நானும் தமிழ்க்கடலுடன் சென்றிருந் ததை நினைவுகூர்கின்றேன். திருமண நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள இராய.சொ.வுடன் சென்றிருந்தேன். அப்போது எங்கள் கல்லூரி தாளாளர் சி.வி.சி.டி.வி. வேங்கடாசல செட்டியார் அவர்களும் திருமண விழாவுக்கு வந்திருந் ததையும் அவர் ஓர் அறையில் உடம்பு பிடிக்கும் ஆளுடன் இருந்ததையும் உடம்பு பிடித்துக் கொண்டிருந்ததையும் கண்டதை நினைவுகூர்கின்றேன். அக்காலத்தில் எனக்கு தேவாரம், திருவாசகம், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 16. காரைக்குடி சா.நா.அ.சொ. அண்ணாமலை தம் அருமை மகள் விசாலாட்சியின் திருமண விழாவில் வந்தவர்கட்கு வழங்கி மகிழ்ந்த வெளியீடு (1-7-1974). 17. இராயவரம் ப.வ.ராம. குழந்தையன் செட்டியார் மகன் இராமநாதன் உமையாள் திருமண அன்பளிப்பாக வழங்கப்பெற்றது (11-6-1956)