பக்கம்:தமிழ்க்கடல்-இராய.சொ.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

tt8 தமிழ்க்கடல் ராயசொ இவற்றில் அதிகப் பயிற்சி இல்லை. அறிவியல், உளவியல் இவற்றில் அதிகமாக ஆழங்கால்பட்டிருந்த காலம். இந்த நூல் பன்னிரு ஆழ்வார்களால் அருளப்பெற்ற நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்திலிருந்து பொறுக்கி எடுக்கப்பெற்ற 400 பாசுரங்களைக் கொண்டது. அவை வருமாறு: பெரியாழ்வார் 55 பாசுரங்கள் ஆண்டாள் 55 பாசுரங்கள் குலசேகராழ்வார் 20 பாசுரங்கள் திருமழிசையாழ்வார் i5 பாசுரங்கள் தொண்டரடிப் பொடிகள் 15 பாசுரங்கள் பொய்கையார் 12 பாசுரங்கள் பூதத்தார் 12 பாசுரங்கள் பேயார் i2 பாசுரங்கள் திருப்பாணாழ்வார் 2 பாசுரங்கள் மதுரகவி ஆழ்வார் 2 பாசுரங்கள் திருமங்கையாழ்வார் f00 பாசுரங்கள் நம்ஆழ்வார் 100 பாசுரங்கள் மொத்தம் योTाकाष्ठाका இந்தப் பாசுரங்கள் யாவும் படிப்போருக்குத் தேனாய், பாலாய், கன்னலாய் (கருப்பஞ்சாறு, அமுதமாக இனிக்கும். அவர்களைத் திருமால் பக்தியில் ஆழங்கால் படச் செய்யும். இந்தப் பதிப்பைப் பற்றிக் கூறும் பேச்சில் இரண்டு கருத்துகளை வலியுறுத்த விழைகின்றேன். ஒன்று. நாலாயிரத்திவ்வியப் பிரபந்தத்தில் 4000 பாசுரங்கள் இல்லை. பின்னர் வந்த ஆசாரியப் பெருமக்கள் இலக்கண வரம்பை மீறி 4000 எனக் கணக்கிட்டனர். தென் கலையார் ஒருவகையிலும் வடகலையார் மற்றொரு வகை யிலும் கணக்கிட்டுள்ளனர்.