பக்கம்:தமிழ்க்கடல்-இராய.சொ.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகுப்பு நூல்கள் 117 தென்கலையார். இவர்கள் கணக்குப்படி (அப்பிள்ளை யார் கணக்கு முதலாயிரம் 947 பெரிய திருமொழி 1134 திருவாய்மொழி 1102 இயற்பா 593 மொத்தம் 3776 இதில் 1000க்கு 224 பாசுரங்கள் குறைவாக உள்ளன. இதில் இராமாநுசர் காலத்தில் திருவரங்கத்தமுதனாரால் பாடப்பெற்ற இராமதுச நூற்றந்தாதி (108 பாசுரங்கள்) சேரவில்லை. இராமாதுசர் காலத்தில் இராமாதுச நூற்றந்தாதி 24-வது பிரபந்தமாகச் சேர்க்கப்பெற்றது என்பது அறியத்தக்கது. அதன் பாசுரங்களைச் சேர்த்தால் நாலாயிரத்தின் பாசுரங்களின் தொகை 3776+108=3884 ஆகிறது. நாலாயிரத்திற்கு 16 பாசுரங்கள் குறைகின்றன. வடகலையார்: இராமாநூற்றந்தாதியின் பாசுரங்களைச் சேர்த்து 4000ஆகக் கணக்கிடுவர் வேதாந்த தேசிகர். இவர் இயற்பாவின் பாசுரங்களை 701ஆகக் கணக்கிட்டு (அவற்றுடன் இராமாதுச நூற்றந்தாதிப் பாசுரங்கள் 108ம் சேர்த்து) 4000 எனக் கணக்கிடுவர், இவர் தமது பிரபந்தசாரம் என்னும் நூலில், - அத்தனுயர் வேங்கடமாற் காயிரத்தோ டானஇரு நூற்றோரைம் பத்து மூன்றும் என்று திருமங்கையாழ்வார் பாசுரங்களையே 1253 எனக் கணக்கிடுகின்றார். அதன் விவரம்: பெரிய திருமொழி 1134 திருவெழுக் கூற்றிருக்கை 1 மொத்தம் #135 18. பிரபந்தசாரம் - 10 (தே.பி. 382). 18