பக்கம்:தமிழ்க்கடல்-இராய.சொ.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 தமிழ்க்கடல் ராயசொ எஞ்சிய (253-135 18 பாசுரங்கள் இரு திருமடல்களிலும் இருப்பனவாகக் கொண்டிருத்தல் வேண்டும். இரண்டு மடல்களிலும் உள்ள மொத்த அடிகள் 452. நான்கு அடிகளை ஒரு பாசுரமாகக் கொண்டு பார்த்தால் 113 பாசுரங்களாகின்றன. சிறிய திருமடலின் தலைப்பிலுள்ள தனியன் பாசுரம் ஒன்றும், ஈற்றிலுள்ள வெண்பா ஒன்றும், பெரிய திருமடலின் தனியன் ஒன்றும், ஈற்றிலுள்ள வெண்பாக்கள் இரண்டும் சேர்த்து 118 எனக் கணக்கிட்டனரோ என்று சிலர் கருதுவர். தனியன்களைச் சேர்த்திருந்தால் வேறு ஆழ்வார்களின் பாசுரங்களுக்குரிய தனியன்களையும் சேர்த்திருத்தல் வேண்டும். இங்ங்ணம் சேர்க்கவில்லையாதலின் அது தவறு. பிரபந்தசாரத்தின் இன்னொரு பாடலில், சிறியமடற் பாட்டு முப்பத் தெட்டிரண்டும் சீர்பெரிய மடல்தனிற்பாட்டு எழுபத்தெட்டு" என்பதில் சிறிய திருமடலை 10 பாசுரங்களாகவும், பெரிய திருமடலை 78 பாசுரங்களாகவும் கொண்டுள்ளதை அறியலாம். பொருளுக்கேற்பச் சில அடிகளைச் சேர்த்துப் பாசுரங்களைச் கணக்கிடுதல் முன்னோர்களின் மரபே என்று கருத இடம் உண்டு. இதனைச் சரி என்று கொண்டால் 18 பாசுரங்கள் கணக்கிற்கு வருகின்றன. எனவே இருமடல்கள் நீக்கிய, இயற்பா 594 சிறிய திருமடல் 40 பெரிய திருமடல் 78 இராமாநுசநூற்றந்தாதி #08 மொத்தம் क्लन7 இக்கணக்குப்படி நாலாயிரத்தில் 4000 பாசுரங்கள் அமைந்து விடுகின்றன. ஆயினும் குறையொன்று தோன்றுகின்றது. 19. பிரபந்தசாரம் - 13 (தே.பி. 379).