பக்கம்:தமிழ்க்கடல்-இராய.சொ.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகுப்பு நூல்கள் 119 கலிவெண்பாவாலாகிய இரு திருமடல்களையும் சிதைத்துப் பாசுரக் கூறுகளைப் பாசுரங்களாகக் கொள்ளல் பொருந்தாது. யாப்பு இலக்கணத்திற்கும் முரணானது. எனவே, தேசிகளின் கணக்கை ஏற்றுக் கொள்ள இயலாத தாகின்றது. அப்பிள்ளையாரின் கணக்கு இவர் இராமாநுச நூற்றந்தாதிப் பாடல்களைச் சேர்க்காமல் 4000 ஆகக் கணக்கிடுவர். அவர்தம் திருமங்கையார் வாழித் திருநாமத்தில், இலங்கு எழுகூற்று இருக்கை இருமடல் ஈந்தான் வாழியே! இருமுன் றில்பாட்டு இருநூற்றிரு_ , பத்தே இசைத்தான் வாழியே! என்று கூறுவர். இவர் இரு மடல்களின் கண்ணிகளையும் பாசுரங்களாகக் கணக்கிடுவர். சிறிய திருமடல் 77% கண்ணிகள் பெரிய திருமடல் 148% கண்ணிகள் ஆக, மொத்தம் 226_ঞ্জরটারালনা எனவே, இரு மடல்கள் நீங்கிய இயற்பாப் பகுதிப் பாசுரங்கள் 591 மடல்களின் பாசுரங்கள் 226 ஆக, மொத்தம் ব্লদ7 இவர் கணக்குப்படியும் நாலாயிரத்தில் 4000 பாசுரங்கள் அமைந்து விடுகின்றன. இங்கும் ஒருகுறை தோன்றுகின்றது. கண்ணிகள் பாசுரங்களின் பகுதிகள். அவற்றைப் பாசுரங்களாகக் கணக்கிடல் இலக்கண வரம்பினை மீறிய குற்றமாகின்றது. ஆகவே, இக்கணக்கும் 20. வாழித் திருநாமம் - 10