பக்கம்:தமிழ்க்கடல்-இராய.சொ.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 தமிழ்க்கடல் ராயசொ பொருந்தாதாகின்றது. தவிர, இராமநுச நூற்றாந்தாதியைச் சேர்க்காத குற்றமும் செய்ந்நன்றி கொன்ற பாவமும் வந்து சேர்கின்றன. வைணவம் நிலைத்திருக்கும் காலம் வரையிலும் இராமாநுசருடைய பெயரும் நிலைத்திருக்கு மாறு காத்தல் வேண்டும். என் முடிவு: நாலாயிரத்தில் 4000 பாசுரங்கள் இருந்தே யாக வேண்டும் என்ற கொள்கையை நிலை நாட்டவே இலக்கண வரம்பையும் மீறித் துணிந்தனர். இது தேவை இல்லாத கொள்கை 4000க்குச் சில பாசுரங்கள் குறைவாக இருப்பினும், தொகை மிகுதி பற்றி நாலாயிரம் என்றே வழங்கப்பெறுகின்றது என்று கொள்ளலே ஏற்புடைத்து. பத்துக்குக் குறைவாகவும் பத்துக்கும் மேலாகவும் உள்ள பாசுரங்களைச் சேர்த்து ஒரு பதிகமாகக் கொள்ளும் ஒரு வழக்கு உண்டல்லவா? 947 பாசுரங்களைக் கொண்ட பகுதியை முதலாயிரம் என்று வழங்குகின்றோம் அன்றோ? அங்ங்னமே திருவாய்மொழி 1102 பாசுரங்களா லமைந்திருப்பினும் நிரநிறை ஆயிரத்து" 'சீர்த்தொடை ஆயிரத்து" "அமர்சுவை ஆயிரத்து" 'குருகூர்ச் சடகோபன் சொன்ன ஆயிரம்" என்று ஆழ்வார்தாமே அருளிச் செய்துள்ளமை ஈண்டு அறியத்தக்கது. பெரிய திருமொழி 1134 பாசுரங்களால் அமைந்திருந்தும் 'பொங்குபுகழ் மங்கையர்கோன் ஈந்த மறையாயிரம்”என்று எம்பார் அருளிச் செய்துள்ளமையும் 108 பாசுரங்களைக் கொண்ட அந்தாதியை (எ.டு. இராமதுச நூற்றந்தாதி நூற்றந்தாதி என்று வழங்கப்பெறுவதும் ஈண்டுச் சிந்தித்தல் தகும். எனவே, 4000க்குச் சில பாசுரங்கள் குறைந்துள்ள திவ்வியப் 21. திருவாய் 11:11 22. மேலது 12:11 23. மேலது 13:11 24. மேலது 21:11 25. பெரி. திரு. தனியன்.