பக்கம்:தமிழ்க்கடல்-இராய.சொ.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகுப்பு நூல்கள் 121 பிரபந்தத்தை 'நாலாயிரத் திவ்வியப்பிரபநத்ம்' என்று வழங்குவது எல்லாவற்றாலும் பொருந்துகின்றது. இரண்டு. இது பெரியாழ்வாரின், ஒருமகள் தன்னை உடையேன்; உலகம் நிறைந்த புகழால் திருமகள் போல்வ ளர்த்தேன்; செங்கண்மால் தான்கொண்டு போனான் பெருமகள் ஆய்க்குடி வாழ்ந்து பெரும்பிள்ளை பெற்ற அசோதை மருமக ளைக்கண்டு உகந்து மணாட்டுப் புறஞ்செய்யும் கொல்லோ ? (44) என்ற பாசுரத்தில் "பெரியாழ்வார் தன் ஒரே மகளாகிய ஆண்டாளைச் செங்கண்மால்தான் கொண்டு போனான் என்ற நிலையை நினைந்து உருகிக் கூறுவது இப்பாசுரம்" என்று தமிழ்க்கடல் கூறுவது தவறு. நானும் இப்படித்தான் கொண்டிருந்தேன் 1960களில். இக்கருத்தையே கொண்டு திருமலை-திருப்பதி தேவஸ்தான்ம் வெளியிடும் 'சப்தகிரி என்ற திங்கள் இதழிலும் ஒரு கட்டுரை வரைந்திருந்தேன். இதைக் கண்ட காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரிய சுவாமிகள் இதைத் தவறு என்று சுட்டிக்காட்டி விளக்கமும் அளித்தார்கள். இப்பாசுரம் (பெரியாழ். திரு. 3.8:) கொண்ட பதிகத்தின் தலைப்பில் உள்ள தலைவன் பின்சென்ற மகளைக் குறித்துத் தாய் பலபடி உன்னி ஏங்குதல்' என்ற தொடரால் இது 'தாய்ப் பாசுரம் வகையைச் சேர்ந்தது என்றாகின்றது." ஆகவே இதனை பெரியாழ்வார் தம்மை யசோதைப் பிராட்டியாகப் பாவித்துக் கொண்டு பேசும் முறையில் அமைந்தது, ஆண்டாளைக் குறிப்பிடுவதல்ல என்பதை ஈண்டு அறிதல் வேண்டும். 26. ஆழ்வார் பாசுரங்களில் அகப்பொருள் துறைகளைச் சார்ந்த பாசுரங்களை 'தோழிப் பாகரம்', 'தாய்ப் பாசுரம்', 'மகள் பாசுரம்' என்று வகைப்படுத்திப் பேசப்பெறும்.