பக்கம்:தமிழ்க்கடல்-இராய.சொ.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 தமிழ்க்கடல் ராயசொ 15. பிள்ளைப்பாட்டு' பல பிள்ளைத் தமிழ் நூல்களிலுள்ள பாடல்களையும் தாலாட்டுப் பாடல் களையும் கொண்டது இந்நூல். பிள்ளைத் தமிழைப் பிள்ளைப்பாட்டு என்றே வழங்கும் பன்னிரு பாட்டியல். பிள்ளைத்தமிழ் இலக்கியத்திற்கு முதன் முதலாக வித்திட்டவர் பெரியாழ்வார். இந்த நூலில் பெரியாழ்வார், குலசேகரர் தாலாட்டு, குமரகுருபரர், பகழிக்கூத்தர், மகா வித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை, இராய.சொ. அந்தகக்கவி வீரராகவமுதலியார், மார்க்க சகாய தேவர், கந்தப்ப தேசிகர், சிதம்பர சுவாமிகள் ஆகியவர்களின் படைப்புகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பாடல்கள் ஒரு சேரத் தொகுக்கப் பெற்று கருத்துரையுடனும் குறிப்புரை யுடனும் வெளியிடப் பெற்றுள்ளன. படிப்பதற்கு மிகவும் சுவையான தொகுப்பு நூல். 16. திருமணப் பாட்டு'; பண்டைய இலக்கியங்களின் தொகுப்பு நூல். பண்டைய நூலாகிய சிலப்பதிகாரம் முதல் இருநூற்றைம்பது ஆண்டுகட்கு முன் தோன்றிய திருவிளை யாடற்புராணம் ஈறாக ஒன்பது இலக்கியங்களிலிருந்து பதினொரு திருமண நிகழ்ச்சிகளை 10 பாடல்களாகத் தொகுக்கப் பெற்றது. பெரிதும் காதற்சுவை நிரம்பிய பாடல்கள் இவை. படித்து இலக்கியச் சுவையில் திளைக்கலாம். .-- 17. தெய்வப் urutama”. இதில் முன்னை நாள் முதல் இன்று வரை அருள் பெற்ற செல்வர் பலராலும் இறைவன் திருவடிகளில் சாத்தப்பெற்ற மலர்களைப் பொறுக்கி 27. இராயவரம் ப.வ.ராம. குழந்தையன் செட்டியார் மகள் நிறைநாட் செல்வி அடைக்கம்மை புதுமைப் பூ - நினனவாக அன்பளிப்பாக வழங்கப்பெற்றது. ஜய - சித்திரை -4) 28. ஆத்தங்குடி கா.அரு.கா. காடப்ப செட்டியார் மகன் செல்வன் அருணாசலம் திருமண மலராக வெளி வந்தது. மன்மத ஆனி - 12. 29. கோட்டையூர் க.வி.அழ.மு. இராமநாதன் செட்டியார் மகள் வசந்தா திருமணத்தின் அன்பளிப்பாக வெளியிடப் பெற்றது. நந்தன. வைகாசி-6.