பக்கம்:தமிழ்க்கடல்-இராய.சொ.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகுப்பு நூல்கள் 123 எடுத்து எழில்பெற இணைந்த ஓர் அற்புதப் பாமாலை. இத்தொகுப்பு நூலில் அடங்கியுள்ள வாடா மலர்கள் 101, சிவபெருமானுக்கு 40 மலர்களும், திருமாலுக்கு 32 பாசுரங்களும், முருகப் பெருமானுக்கு 10 மலர்களும், விநாயகருக்கு 3 பாடல்களும், கலைமகள் உமையம்மை, திருமகள் ஆகியவர்கட்கு முறையே 3, 2, 1 கவிதைகளும் பாரத மாதாவுக்கு ஒரு பாடலும், எந்தக் கடவுள் பெயரும் குறிப்பிடாத பொதுப் பாடல்கள் 9-உம் ஆக 101 பாடல்கள் இத்தொகுப்பை அணி செய்கின்றன. இதில் திருவாசகப் பாடல்கள் பெரிதும் எடுப்பாக அலங்கரிக்கின்றன. சைவ வைணவ வேறுபாடின்றி அரனையும் அரியையும் பின்னிப் பிணைக்கின்றது இந்நூல். - 18. அங்கங்களின் பயன்'. இத்தொகுப்பு நூல் 40 பாக்களைக் கொண்டது. இறையைத் தொழவே உடம்பும் அதன் உறுப்புகளும் படைக்கப் பெற்றன என்ற கருத்து அமைந்த கவிதைகளே இங்கு இடம் பெறுகின்றன. நாவுக்கரசர் பாசுரங்கள் 9, பிற பெரியார் 31 பேர்களின் பாடல்கள் 31உம் இந்நூலை அணி செய்கின்றன. நல்ல தொகுப்பு இது. 19. தேவாரமணி'; சம்பந்தர், அப்பர், சுந்தரர் என்ற மூவர் திருப்பதிகங்களையும் தேவாரம்' என்ற பெயரால் முதன் முதல் தெளிவாகக் குறிப்பிட்டு வழங்கியவர். சைவ எல்லப்ப நாவலர் ஆவர். 2 தேவாரம் என்ற தொடருக்கு பலர் பலவிதமாகப் பொருள் கூறுவர். 30. காரைக்குடிமுெத்துப்பட்டினம் சொநிாரானைன் மகள் கலைச்செல்வி சரசுவதி திருமண அன்பளிப்பாக வெளியிடப் பெறுகின்றது. துன்முகி, ஐப்பசி-2. 31. தேவாரமணியை கோட்டையூர் ஐயா என வழங்கும் க.வி.அழ.மு. இராமநாதன் செட்டியார் சொற்படி இராயவரம் அ.கு.ரா.ம.சு.சோ இராமன் செட்டியார் வெளியிட்டு விலையின்றி வழங்கிப் புகழ் பெறுகின்றார். இந்த இரு அருட்செல்வர்கட்கும் தமிழுலகம் கடமைப் பட்டுள்ளது. காந்தி ஆண்டு 84. தை-4. 32. திருவருணைக் கலம்பகம் - நால்வரையும் போற்றும் காப்புச் செய்யுள்.