பக்கம்:தமிழ்க்கடல்-இராய.சொ.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 தமிழ்க்கடல் ராயசொ (1) தேவ+ஆரம் எனப் பிரித்து இறைவனுக்கு மாலையாவது எனப் பொருள் கூறுவர் சிலர். தேவார ஆசிரியர் மூவரும் இறைவனுக்கு அணியும் பாமாலைகளாக அழகிய திருப்பதிகங்களைப் பாடிப் போற்றிய திறத்தை இன்னோர் தம் கொள்கைக்கு ஆதாரமாகக் கொள்வர். (2) தே + வாரம் எனப் பிரித்துத் தெய்வத்தினிடத்து அன்பை விளைவிப்பது எனப் பொருள் கூறுவர் சிலர். தே - கடவுள்; வாரம் - அன்பு. "வாரமாகித் திருவடிக்குப் பணி செய் தொண்டர் பெறுவதென்னே' என வரும் சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரத்தில் வாரம் என்னும் சொல் இறைவன்பால் மெய்யடியார்கள் வைத்த பேரன்பு என்னும் பொருளில் வழங்கப்பெறுதல் இவண் கருதற்குரிய தாகும. தேவாரம் ஒரு பெருங்கடல். அத்தெய்வக் கடலுள் மூழ்கி எடுக்கப்பெற்ற சிறந்த மணிகளைக் கொண்டது இந்நூல். இன்றுள்ள தேவார அடங்கன் முறைப்படி மூவர் பாடிய தேவாரப் பாடல்கள் 8239; சம்பந்தர் தேவாரம் 1147; அப்பர் தேவாரம் 306 சுந்தரர் தேவாரம் 1026 இந்த 8239 பாடல்களில் பொறுக்கிய 300 பாடல்கள் கொண்டது இத்தொகுப்பு நூல். சம்பந்தர், தேவாரத்தில் 100-உம், அப்பர் தேவாரத்தில் 150-உம், சுந்தரர் தேவாரத்தில் 50-உம் ஆக தேர்ந்தெடுத்த 300 திருப்பாடல்கள் இந்நூலில் அடங்கி யுள்ளன. இம்மூவரும் பாடிய சிவத்தலங்கள் 275. பல்லாயிரம் பாடல்களை அனைவரும் படிப்பர் என்று பார்த்தல் முடியாத செயல். தேவாரத்தில் உள்ள அருமணிகளை 'அடங்கல் முறை'யாக வைத்து விடாமல் அனைவரும் படித்து இன்புற வேண்டும் என்ற நன்னோக்கத்துடன் தமிழ்க்கடல் 300 பாடல்களைத் தேர்ந்தெடுத்துள்ளார்கள். இவற்றை நாம் அவசியம் படித்து அநுபவிக்கவேண்டும்; நேரம் இருந்தால் ஆசையுள்ளவர்கள் முழுநூலில் மூழ்கலாம். அதற்கு இத்தொகுப்பு நூல் புணையாக உதவும்.