பக்கம்:தமிழ்க்கடல்-இராய.சொ.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகுப்பு நூல்கள் 125 இத்தொகுப்பு நூலைப் படித்து உணர தமிழ்க்கடலின் குறிப்புரைகள் (அடிக்குறிப்பில் உள்ளவை கை கொடுத்து உதவும். 20. முருகன் பாமாலை”. இத்தொகுப்பு நூல் 25 பாடல்களைக் கொண்டது. 25 நூல்களிலிலிருந்து நூலுக்கு ஒன்றாக 25 பாடல்கள் தேர்ந்தெடுக்கப் பெற்றுள்ளன. பாடல்கள் யாவும் முருகப் பெருமானைப் பற்றியவை. பாடல் நூலின் வலப்பக்கத்திலும் அதன் கருத்து நூலின் இடப்பக்கத்திலுமாகத் தரப்பெற்றுள்ளன. தமிழறிவு குறைந்தவர்களும் பாடல்களைப் படித்து அநுபவித்து முருக பக்தியை வளர்த்துக் கொள்ளலாம். 21. பாவைப் பாட்டு" பாவாய என்று முடிவு பெறும் பாட்டு பாவைப்பாட்டு. திருப்பாவை, திருவெம்பாவை என்ற இரண்டு பாவைப் பாட்டும் சேர்ந்தது இத்தொகுப்பு நூல். மணிவாசகப் பெருமான் அருளியது திருவெம்பாவை ஆண்டாள் நாச்சியார் அருளியது திருப்பாவை. முன்னது இருபது பாடல்களை உடையது; பின்னது முப்பது பாசுரங்களைக் கொண்டது. திருவெம்பாவை சிவபெருமானின் சீர் பரவவுவது: திருப்பாவை திருமாலின் (இங்கு கண்ணனின்) புகழ் பாடுவது. சிவன் ஆயினும் திருமால் ஆயினும் பெயர் வேறே தவிர இறை ஒன்றே என்பது பேரறிஞர் கண்ட முடிவு. 'ஒருவனே தேவன் (திருமந் - 21.04) என்பது திருமூலரின் திருவாக்கு, அரன் நாரணன் நாமம் (முதல் திருவந் - 5 என்பது பொய்கையாழ்வாரின் பொன்மொழி. ஏற்றான் புள் ஊர்ந்தான் (மேலது - 1 என்பதுவும் இந்த ஆழ்வாரின் 33. கொத்தமங்கலம் திரு சி.வெ.சி. சின்னக் கருப்பன் செட்டியார் பேரன் செல்வன் சின்னக் கருப்பனின் புதுமை நாளில் வெளியிடப்பட்டு அன்பளிப்பாக வழங்கப்பெற்று ஜய, சித்திரை - 26. 34. கோட்டையூர் ராம.பெ.அழ. அழகப்பச் செட்டியார் - உமையாள் ஆச்சி இவர்கள் மணிவிழாவில் (அறுபதாவது ஆண்டு நிறைவு) அன்பளிப்பாக வழங்கப் பெற்றது. காந்தி ஆண்டு 84. பங்குனி - 12.