பக்கம்:தமிழ்க்கடல்-இராய.சொ.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

[5] படைப்பு நூல்கள் தமிழ்க்கடல் இராயசொ. பல் நோக்குடைய பெருமகனார். முறையாகத் தமிழறிவு பெற்ற இராய.சொ.வுக்குப் படைப்பிலக்கியம் மூச்சாக அமைந்து விடுகின்றது. படைப்புத் திறன் பாங்குற வெளிப்படுகின்றது. சுமார் 75 ஆண்டுகட்கு முன் இராய.சொ. குற்றாலத்தி லிருந்தபோது காந்தி பிள்ளைத் தமிழைப் பாடினதாக அறிகின்றோம். அது பல பதிப்புகளைப் பெற்றுள்ளது. வேலூர் சிறையில் ஒராண்டுக்காலம் இருந்த போது ஆறு திங்களில் 30 பகுதிகள் (639 பாடல்கள்) பாடினார்கள்'. 1948இல் காந்தியடிகள் திருநாடு அலங்கரித்த பிறகு “காந்தியும் வள்ளுவரும் (125 பாடல்கள் என்ற நூலைச் செய்தார்கள். மறைந்தவுடன் கையறு நிலையில் இரங்கிய நிலையில் ஏழு பாடல்கள் பிறந்தன. இந்தப் பாடல்கள் அனைத்தையும் ஒன்று சேர்த்து (38 பிரிவுகள் - 901 செய்யுட்கள்) 'காந்திக் கவிதை' என்ற தலைப்பில் அழகப்பா கல்லூரி தமிழ் ஆராய்ச்சித் துறையின் சார்பில், வள்ளல் அழகப்பரின் மகள் திருமதி உமையாள் இராமநாதன் 1. தொடக்ககாலத்தில் காங்கிரசுகாரர்கள் உண்மைத் தேச பக்தர்களாக விளங்கினார்கள். அவர்கள் சிறைச் சாலையை தவச் சாலையாகக் கொண்டவர்கள். சவகர்லால்நேரு சிறையிலிருந்தே () சுயசரிதை (2) உலக வரலாறு (மகளுக்கு எழுதிய கடிதங்கள்) (3) இந்தியாவின் கண்டுபிடிப்பு என்ற மூன்று நூல்களை எழுதினதை ஈண்டு நினைவுகூரலாம்.