பக்கம்:தமிழ்க்கடல்-இராய.சொ.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படைப்பு நூல்கள் 6 129 (செயலர் அறநிலையச் செயற்குழுச் செயலர் ஆதரவில்) வெளிவந்துள்ளது. இஃது ஆராய்ச்சித் துறையின் மூன்றாவது வெளியீடு. முந்திய இரண்டு வெளியீடுகளும் ஆராய்ச்சித் இனத்தைச் சார்ந்தவை; மூன்றாவது படைப்பு இனத்தைச் சார்ந்தது. எனினும் இது இத்துறையின் வாயிலாக வெளி வருகின்றது. இவ்விடத்தில் டாக்டர் வ.சுப. மாணிக்க னாரின் கல்லூரி முதல்வர் கருத்தையும் சிந்திக்கலாம் "பழைய நூல்களை ஆராய்ந்து அமைவதே ஆராய்ச்சித் துறையின் நோக்கம் என்று கருதிக் கொண்டிருக்கின்றோம். இக்கருத்து ஒரளவு பொருந்தும். பல்கலைக் கழகங்களில் புதுநூற் படைப்புக்குத் தனித்துறை இன்றில்லை; இல்லாதவரை உள்ள ஆராய்ச்சித் துறையே படைப்பிய லையும் மேற்கொள்ளவேண்டும். முன்னோர் படைத்தளித்த பனுவல்களை ஆராயும் நாம் பின்னோர் ஆராயும் வண்ணம் சிலவேனும் புதியன ஆக்கிப் படைக்க வேண்டாமா? கதிரறுப்பவர்கட்கு வித்திடலும் கடன். படைப்பு என்பது மூலநூல்; ஆராய்ச்சி என்பது வழிநூல் வழிநூல் இரண்டு வெளியீடு செய்த அழகப்பா கல்லூர் ஆராய்ச்சித் துறை பல்கலைக் கழக ஆராய்ச்சித் துறைக்கு ஒரு வழிகாட்டியாக இயக்குநர் தமிழ்க்கடல் இராய.சொ. படைத்த மூலநூலை வெளியிடுகின்றது என்பதனைப் பெருமிதமாகச் சுட்டிக்காட்ட விழைகின்றேன். திறமான புலமை என்பது ஆராய்ச்சி வன்மையும் படைப்பு வன்மையும் குறிக்கும். தமிழ்க்கடலார் இவ்விருவகைத் திறப்பாடும் வாய்ந்தவர் என்பதற்கு இம்மூன்று வெளியீடு களும் சான்றாகின்றன". இனி இந்த படைப்பு நூலைப்பற்றி சில சொல்ல விழைகின்றேன். இந்த நூலிலுள்ள செய்யுட்கள் வெண்பா, அகவற்பா, ஆசிரியத் தாழிசை, அறுசீர் - எண்சீர் - பன்னிருசீர் சந்த விருத்தங்கள், கலி விருத்தம், கட்டளைக் கலித்துறை,