பக்கம்:தமிழ்க்கடல்-இராய.சொ.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 தமிழ்க்கடல் ராயசொ வஞ்சித் தாழிசை, வஞ்சி விருத்தம், காவடிச் சிந்து, கண்ணி என்றவாறு பாவும் பாவினமும் கலந்த பல்வேறு யாப்புகளில் அமைந்துள்ளன. பிரிவு 38 என்ற போதிலும் அனைத்தும் காந்தி என்னும் ஒரு பொருளை நுதலி எழுந்தவையாகும். புலவர் ஒருவர் ஒரு பொருளை நேராகவும் பாடுவார்; உள்ளாகவும் பாடுவார். நேர் முகமாகப் பாடினால் பாடற் பொருள் எனவும், உள்முகமாகப் பாடினால் வைப்புப் பொருள் எனவும் வழங்கப்பெறும். இது, பாடல் பெற்ற தலம் எனவும் வைப்புத்தலம் எனவும் பாகுபடுத்தும் முறையை ஒப்பு நோக்கி மகிழலாம். பிள்ளைத்தமிழ், நான்மணிமாலை, திருப்பள்ளி எழுச்சி, திருத்தசாங்கம், திருப்பல்லாண்டு என்பன போன்ற பகுதிகளில் காந்தியடிகள் பாடற் பொருளாகத் திகழ்கின்றார். காந்தி அந்தாதி, காதல் மறுமணம், தாலாட்டு, தோழிப் பேச்சு என்பன போன்ற பகுதிகளில் அவர் வைப்புப் பொருளாக விளங்குகின்றார். இதனை மேலும் எடுத்துக்காட்டுகளால் விளக்கு வேன். மயிலே! மணியே! மணமே ! மருந்தே ! மனத்தில்வளர் குயிலே கொடியே! குணமே ! கொழுந்தே குழலொடுயாழ் பயில்இன் மொழியே! விழிதிற வாய்எனில் பாவினதும் அயிலேன்! இதுமெய்! அருங்காந்தி ஆணை ! அறிகுவைய்ே." இது காந்தி அந்தாதியில் நாணிக் கண்புதைத்தல் என்ற துறையில் வரும் பாடல். நாணத்தால் கண் பொத்திக் கொண்ட காதலியை நோக்கி, "நீ எனைப் பார்க்கக் கண் திறவாவிட்டால், பட்டினி கிடப்பேன்; காந்தி மேல் ஆணை' 2. காந்தி அந்தாதி - 26 நூல் பக் 133)