பக்கம்:தமிழ்க்கடல்-இராய.சொ.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படைப்பு நூல்கள் 9 131 என்கின்றான் காதலன். இப்பாடலில் காந்தி வைப்புப் பொருளாகின்றார். தாலாட்டுப் பகுதியில், காந்தி அறந்தனைக் காசினிஎலாம் பரப்பப் பேர்ந்த இள்ங்கொடியே’ எனவும், இராஜன் பாபு வரவேற்புரையில், நடுஉயர் காந்தி நன்மணிப் பாங்கர் வடுவிலாது ஒளிரும் வயிரமா மணியே 14 எனவும் பாடுங்கால் காந்தி வைப்புப் பொருள் ஆகின்றார். தலம் எதுவாயினும் பலவாயினும் ஒரிறைவன் உறைகின்றான்; அதுபோல் தலைப்பு எதுவாயினும் பலவாயினும் ஒரு காந்தியே எங்கும் பொருளாகின்றார். இராயசொ.வின் மனநிலை: இராய.சொ.வின் மனநிலை யையும் அவருக்கும் காந்தியடிகட்கும் உள்ள உறவுநிலை ஆகியவற்றைத் தெரிந்துகொண்டால்தான் காந்திக் கவிதையின் உயிரோட்டம் நன்கு விளங்கும். காந்தியடி களைத் தம் தெய்வமாகவும் தம்மை அடிகளின் அடியவ னாகவும் வைத்து வழிபடுகின்றார் தமிழ்க்கடல். எனவே தேவார திவ்வியப் பிரபந்தங்கள்போல காந்திக் கவிதையும் தெய்வப் பாசுரம்போல் அமைந்து விடுகின்றது. பண்கொண்ட குழலூதிப் பசுக்காத்த திருமாலும் பங்கிற் பச்சைப் பெண்கொண்ட பெருமானும் பிரமனெனும் மறையோனும் புத்தன், ஏசு, மண்கொண்ட வள்ளுவனும் மற்றொழிந்த பெரியோரும் ஒன்றாய் வந்த கண்கண்ட தெய்வமெனும் காந்திதனை இழந்திட்டோம் அந்தோ? அந்தோ' 3. தாலாட்டு பெண்பால்) - 6 நூல்பக் 231) 4. இராசன் பாபு வரவேற்புரை - (16-17) 5. காந்தி இரங்கற்பா - 7 நூல். பக் 277)