பக்கம்:தமிழ்க்கடல்-இராய.சொ.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 0 தமிழ்க்கடல் ராயசொ என்பது காந்தியடிகள் மறைந்தபோது தமிழ்க்கடல் கொந்தளித்துக் கதறியழுத கையறு நிலைப் பாடலாகும். இதுகாறும் இவ்வுலகின் வழிபடும் கடவுளர்களும் சமயச் சான்றோர்களும் திரண்டு ஒருருக் கொண்ட தனி முதல் தெய்வம் எனக் காந்தியடிகளைப் போற்றி வழிபடுவர். தெய்வ உறவு ஆயின்மையின் காந்திக் கவிதைகள் தெய்வம் மணக்கும் செஞ்சொற் பாசுரங்களாகின்றன. அவை தெய்வ நிலைக் கருத்துகள் பொலியும் கருவூலங்களாகின்றன. இந்நிலையில் காந்தியடிகள் கடவுள் நிலை பெற்று கடவுள் நிலை பெற்ற காந்திப் பெருமான்" காந்திப் பரந்தாமன்" 'கருதுமின் காந்திப் பதமலர் கன்னல் மொழிபகர் காந்தி அடியார்’ என வரும் பக்திச்சுடர் தெறிக்கும் புதிய தெய்வத் தொடர்கள் இந்நூலில் ஆளப்பெற்றுள்ளமை இக்கருத்துக்கு அரணாக அமைகின்றது. காந்திப்பிள்ளைத் தமிழும் காந்தியடிகளை, . 'மைப்படித்தோன் ஆனாலும் அவன்புகழை வாயார வாழ்த்து வானேல் ஒப்பரிய உயர்பதத்தை உறுவன் என்று போற்றுவதையும் காண்கின்றோம். இலக்கியப் புரட்சி: தமிழ்க்கடல் தந்த காந்தி பிள்ளைத் தமிழ்', 'காந்தியும் வள்ளுவரும்', 'காந்தி அந்தாதி, காந்தி நான்மணி மாலை என்ற நான்கும் தனிநூல் வனப்பின; இவை தமிழ்க்கடலில் விளைந்த நான்கு முத்துக்குவியல்கள். இவற்றில் காந்தி அந்தாதி இலக்கியப் புரட்சி செய்கின்றது. இரண்டு பாடல்களால் இதனை உங்கட்குக் காட்டுவேன். இந்நூலும் உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் வகையைச் சார்ந்தது. 6. காந்தியும் வள்ளுவரும் - 2. 7. மேலது - 61. 8. காந்தி அந்தாதி - 35. 9. மேலது - 3 - 10. காந்தி பிள்ளைத்தமிழ் - பாயிரம் - 4