பக்கம்:தமிழ்க்கடல்-இராய.சொ.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படைப்பு நூல்கள் 133 அகப்பொருளில் பிரிவு பல கூறுதல் உண்டு. அத்துறைப்பாடல்கள் தெவிட்டாத தேனென இனிப்பவை. அப்பிரிவுகளிலும் வேறாகத் தாய்நாட்டுக் கடமைக்குப் பிரிகின்றான் காந்தி அந்தாதித் தலைமகன். தலைவியை விட்டுத் தலைவன் பிரிவான் என்று பாடுவதே அகப் பொருள் மரபு. ஈண்டு நாட்டுப்பற்று காரணமாகத் தலைவனைத் தலைவி பிரிந்து சிறையுள் புகுகின்றாள். இருவருமே இல்லத்தை விட்டுத் தனித்தனி சிறையில் வாழ்கின்றனர். ஒரு சிறையிலிருந்து மறுசிறைக்கு வண்டு தூது விடப் பெறுகின்றது. இங்ஙனம் துறைகள் புதியனவாம் போது துறைவிளக்கங்களும் புதியனவாதல் இயல்பா கின்றது. எவரும் விரும்ப இசையிடு வண்டே எழுந்து உயர்ந்த சுவருள் இருக்கும்என் கந்தரன் தன்னிடம் தூது சென்று, "கவரும் நினது கரும்பு சிறையில் கலை பயின்று தவரும் வியந்திட வாழுகின் றாள்" எனச் சாற்றுகவே" சிறையுறையும் தன் காதலனுக்கு இன்னொரு சிறை வாழ் காதலி வண்டுமூலம் கூறுகின்றாள் என்பது இவ்வந்தாதித்துறை. இஃது அகத்துறையில் ஒரு புதுத்துறை. இன்னொரு பாடல். இதில் காந்தியந்தாதித் தலைவி காதலுக்கு ஒரு விதி போடுகின்றாள். தன்னை விழையும் தலைவனை நோக்கி, "என்னை மணம் செய்து கொள்ள விரும்புவையேல் காந்தியின் அறத்தை உலகறியச் செயலால் பரப்புவேன்; யான் ஒத்துழைப்பேன் என்று காந்திமேல் ஆணை இடுவாய், இடுவையேல் உனை நான் மன்றல் புரிவேன்; என்னை விரும்பின் இதுதவிர உனக்கு வேறு வழி 11. காந்தி அந்தாதி - 22