பக்கம்:தமிழ்க்கடல்-இராய.சொ.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 தமிழ்க்கடல் ராயசொ இல்லை" என்று காதல் விதி பகர்கின்றாள்" இதனால் மணக்காதலினும் காந்திக்காதல் பெரிதென உணர முடிகின்றது. மற்றும் ஒரு பாடல். இது பாலனைப் பழித்தல்' என்ற துறையில் அமைந்திருப்பது. "மெய்நொந்து உனைப்பெற்று யான்பெற்ற இன்பம்இம் மேதினியில் அய்யா! பெரிதே எனினும் அருந்தவக் காந்திகளத்து எய்யாது உழைத்து இன்றுஇனிது பெருந்தவம் எய்தல் இன்றித் துய்யாய்! சிலநாள் வறிது கழித்திடத் தோன்றினையே." என்பது பாடல். இந்தத் துறை அகத்துறைகள் நானுறுக்கும் அப்பாற்பட்டது. இதில் தலைவி தான் பெற்ற பிள்ளையை நோக்கி, "அய்யா, உன்னைப் பெறக் கழித்த நாட்களில் காந்தி வழிப்படி நாட்டுத் தொண்டு செய்ய முடியாமற் போயிற்றே" என்று வருந்துகின்றாள் தாய். மக்கட்பேறால் பெற்ற இன்பத்தினும் நாட்டுக்கடமை பெரிது எனவும், நாட்டுக்கடமை வீழ்நாள் படாமல் நாடோறும் செய்ய வேண்டும் எனவும் உணர்கின்றோம். சுவைக்காக பல பட்டடைச் சொக்கநாதப் புலவர் இத்துறையில் பாடிய பாடல் ஒன்றையும் ஈண்டுத் தருகின்றேன். அரும்பால கா முனம் பூமணம், சொற்பொருள், ஆகம் உயிர் கரும்பாம் சுவை,எள்ளும் எண்ணெயும் போலொத்த காதவரைப் 12. 50 மேலது. திருமங்கையாழ்வார் குமுதவல்லி நாச்சியார் போட்ட நிபந்தனைகளை ஈண்டு நினைவுகூரலாம். 13. மேலது - 17