பக்கம்:தமிழ்க்கடல்-இராய.சொ.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரும்பாலில் நல்லன்னம் கங்கா சலத்தைப் பிரிப்பதுபோல சரும்பாம் புலவர் யமன்ஆலை செக்கெனத் தோன்றினையே." என்பது பாடல். "அருமையான மகனே, அந்த நாளில் - நீ பிறப்பதற்கு முன்னர், நானும் நின் தந்தையும் (காதலரும்) பூவும் மணமும் போல - சொல்லும் பொருளுமாக - உடம்பும் உயிரும் என்ன - கரும்பும் அதில் பொருந்தும் சுவையுமாக - எள்ளும் அதனுள் இருக்கும் எண்ணெயும் என்று சொல்லும்படிப் பிரியா இயல்பு கொண்டு வாழ்ந்தோம். நீரை விட்டுப் பாலைப் பிரித்தெடுக்கும் அன்னப் பறவைபோல் நீ வந்தாய் எங்களைப் பிரிவு செய்ய. பூவும் மணமுமாக இருந்த எங்களைப் பிரிக்க வண்டாகவும், சொல்லும் பொருளுமாக வாழ்ந்த எங்களை வேறுபடுத்தப் புலவனாகவும், உடலையும் உயிரையும் பிரித்தெடுக்கும் எமனாகவும், கரும்பையும் சுவையையும் தனித்தனியாக்கும் ஆலையாகவும், எள்ளை விட்டு எண்ணெயை எடுக்கும் செக்காகவும் நீ வந்து தோன்றினாய்" என்கின்றாள். இப்படி ஒரு புதிய துறையில் பாடவேண்டும் என்று இப்பாடல் இராய.சொ.வுக்கு அடி எடுத்துக் கொடுத்திருக்க வேண்டும் என்று கருதலாமல்லவா? புறத்துறையிலும் ஒன்று காட்டுவேன். இந்தியத் தாய்சமம் எய்தாது உலகில் இடர்அடைந்து நொந்திடக் கண்டு, உடன்செய்கடன் வேறுஇலை நுங்கட்குஎன மைந்துடன் விண்டு, அவன்மகளைச் சேர்ந்துஒரு மாபெரும்போர் 14. தனிப்பாடல் திரட்டு - முதற்பகுதி செய்யுள் - 44.