பக்கம்:தமிழ்க்கடல்-இராய.சொ.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 தமிழ்க்கடல் ராயசொ முந்தையர் காணா முறைவதுத் திட்டவன் மோகனனே. இதில் வரும் புறத்துறை ஒரு புதுத்துறையாகும். தலைவன் போர்க்களம் செல்வான் என்பது புறமரபு. அப்போர்க்களம் குருதிப்படைப் போர்க்களம் ஆகும். காந்திப் போர்களம் உறுதியுடையதேயன்றிக் குருதியுடையதன்று. மக்களைச் சேர்த்து ஒரு மாபெரும் போர் முந்தையர் காணா முறை வகுத்திட்டவன், இது 'கத்தியின்றி இரத்தமின்றி வரும்போர் என்று காட்டுவர் தமிழ்க்கடல். இந்தப் போர்முறை பகைவர்க்கும் இனியதாதலின் பெண்ணும் தனித்து அமர்க்களம் புகுகின்றாள். காந்தி அறம்எனும், கண்டார் நடுங்கும் கடுந்தவத்து,என் எந்துஎழில் வாய்ந்த இனிய ஒருமகள், எல்படைகொள் வேந்தர் விறலும் மதியா, வெறுக்கை அமர்க்களத்தே சேர்ந்தன ளே:அருந் தோழி! இனிநான் செய்வதென்னே " இது நற்றாய் இரங்கல்' என்ற புதுத்துறையின் பாற்படும். இதுவும் புறத்துறையில் ஒரு புதுத்துறை. கன்னி காதற்களம் புகாது காந்திக்களம் புகுகின்றாள். - சூழ்நிலைக்கேற்ற உணர்ச்சி. பாடும் புலவனின் சூழ்நிலையைப் பொறுத்துப் பாட்டுக்கு உணர்ச்சி அமையும். இடத்துக்கும் உணர்ச்சிக்கும் உண்டு. மேடை மேல் ஏறிப் பேசும் உணர்ச்சி, பாயின் மீதிருந்து காதலியிடம் பேசும் உணர்ச்சி, நாற்காலியின் மீதிருந்து கொண்டு பிஞ்சு மனங்கொண்ட சிறுவனிடம் கொஞ்சும்போது எழும் 15. காந்தி அந்தாதி - 24. 16. மேலது - 39