பக்கம்:தமிழ்க்கடல்-இராய.சொ.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படைப்பு நூல்கள் 137 உணர்ச்சி வெவ்வேறுபட்டனவாக இருப்பதை நாம் அறிவோம்.இராய.சொ.வின் காந்திக் கவிதையின் பல பகுதிகள் அவர் சிறையிலிருந்த போது பாடப் பெற்றவை. 'சிறைகாப்பு எவன் செய்யும்?' என்று வள்ளுவர் வினவுவர். சிறைகாப்பு தமிழ் செய்யும் என்பது இராய.சொ.வின் வாழ்வில் கண்ட உண்மை. காந்திக் கவிதையின் 38 பகுதிகளில் 30 வேலூர் சிறையில் ஆறு திங்களில் அரும்பியவை. கறையுடையார் நமக்காகக் காணப்பட்ட காவல்.அமை வறட்டுமலை ! சூழ்ந்தவேலூர்ச் சிறையதனில் சிற்றறையில் இருந்து ராய சொக்கலிங்கன். என்று தமிழ்க்கடலாரே சிறைப்பேற்றை மதித்துப் போற்றுகின்றார் சிறைத்துயர் என்று பதிகத் தலைப் பிடாமல் சிறைவாழ்வு' என்று தலைப்பிட்டிருத்தலின் இராய.சொவிற்கு சிறை தவச்சாலையாக அமைந்தது. வேலூர் அரண்மனை மேவிய நாளென்" என்று எட்டடி கொள் சிற்றறையை அரண்மனையாகக் காண்டார். இங்ங்னம் வறட்டுமலை வேலூர்ச் சிறையை அரண்மனை யாக மதிக்கும் இராய.சொ. அடிகள் தம் தெய்வ காந்தி அடைப்பட்டிருந்த ஏர்வாடாச் சிறையை "ஏர்வாடாக் கோவில் உறை எம்மான்" என்று போற்றித் தொழுதல் எத்துணைப் பொருத்தம்: இந்தக் கோவிலை பத்துத் திருத்தாண்டகச் செய்யுள் அடங்கிய பதிகத்தால் பாடிப் போற்றி மகிழ்கின்றார். சிறையிற்கிடந்து சிறையையே நினைத்துப் பாடிய பழக்கத்தால் இராய.சொவால் சிறையை மறக்க முடியவில்லை. 17. சிறைவாழ்வு - 10 18. காந்தித் திருத்தசாங்கம் - 1 19. ஏர்வாடாக் கோவில் - 1