பக்கம்:தமிழ்க்கடல்-இராய.சொ.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 ல் தமிழ்க்கடல் ராயசொ யாரும்நிகர் இல்லாத காந்திதனைத் திருக்குறளோடு இணைவு கண்டு நேரிசைவெண் பாஒருநூற் றிருபத்தைந் தாஅமைத்து, நெஞ்சில் அன்னான் சீருருவை அகலாது சிறைவைத்த ராய.சொக்க லிங்கன். என்று பாடுகின்றார். வளளுவனார் நினைவு: காந்தியடிகளை எண்ணும் போதெல்லாம் வள்ளுவனார் நினைவே இரா.சொவின் மனத்தகத்துத் தலைகாட்டுகின்றது. பிள்ளைத் தமிழின் சிறு தேர்ப் பருவத்துப் பாடலொன்றில் (3) வள்ளுவரோடு காந்தியடிகளை ஒப்பிடுகின்றார். வள்ளுவர் நெய்தொழிலை மேற்கொண்டவர். காந்தியும் அத்தொழிலை ஏற்றவர். வள்ளுவர்க்கு வாசுகி வாழ்க்கைத் துணைவியாக அமைந்ததுபோல் காந்தியடி கட்கு கஸ்தூர்பா மனைவியாக அமைந்தார். வள்ளுவர் ஏதம் இலா அறம் உரைத்தார். காந்தியும் தன்னரிய அவ்வறத்தைத் தகவு அறிந்து சாற்றுகின்றார். இக்காரணங் களால் காந்தியடிகள் 'தெள்ளுத்தமிழ் வள்ளுவனார் திருவரவு - வள்ளுவனார் காந்தியடிகளாகப் பிறந்தார் என்கின்றார்." காந்திக் கவிதையில் வள்ளுவ மணம் பரவாத இடம் இல்லை. சோமேசர் முதுமொழி வெண்பா, திருக்குறள் குமரேச வெண்பா போன்ற திருக்குறளுக்கு வரலாறு காட்டும் நூல்கள் முன்னரே பல உள்ளன. இந்நூல்களில் ஒவ்வொரு குறளுக்கும் பலருடைய வாழ்க்கைச் செயல்கள் 20. காந்தியும் வள்ளுவரும் - 1 21. கா.பி.த. சிறுதேர்ப்பருவம் - 3