பக்கம்:தமிழ்க்கடல்-இராய.சொ.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படைப்பு நூல்கள் 139 இலக்கியமாகக் காட்டப்பெற்றுள்ளன. 'காந்தியும் வள்ளுவரும், என்ற இராய.சொ.வின் கவிதைப் பகுதியில் எல்லாக் குறள்கட்கும் காந்தியடிகள் ஒருவரின் வாழ்க்கை வரலாறுகளே எடுத்துக்காட்டாக அமைகின்றன. இஃது ஒரு புதுமுறை. மேலும், இந்தப் பகுதி உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுளாக அமைந்துள்ளது. செய்யுள் யாத்த தமிழ்க்கடல் அவர்களே வேண்டிய விளக்கத்தை உரைநடையில் காட்டியுள்ளார்கள். வெண்பாவாலும் விளக்கத்தாலும் திருக்குறட்கே சில புதிய கருத்துகளை அறிந்துகொள்ள முடிகின்றது. வெண்பாவிலுள்ள பின்னி ரண்டடித் திருக்குறளுக்கு ஏற்ப முன்னிரண்டடி குறள் பாடும் புலவர் தனிச் சொல்லும் சேர்த்துப் பாடவேண்டும். யாப்பு நிறைவுக்காகப் பாடுபவர் யாப்பறி புலவர் ஆகின்றார். இத்தனிச் சொல்லை ஒப்பற்ற சொல்லாகத் திறம்படத் தொகுப்பவர் பொருளறி புலவராகின்றார். 125 வெண்பாக்களையுடைய இக்கவிதைப் பகுதியில் இராய.சொ. இணைக்கும் தனிச்சொற்கள் திருக்குறளின் பொருளை முன்னிலும் வசப்படுத்துகின்றன. வெண்பாக் களை ஊன்றி நோக்கி இவ்வுண்மையை அறியலாம். பழையதடம் - புரட்சிநோக்கு: தெய்வக் காந்தியைத் தொழும் இராய.சொ. இடத்து நாயன்மார் ஆழ்வார் அடியவர் மனப்பான்மையைக் காண முடிகின்றது. 'எளியேன் ஆள்ளம் கோயில் கொண்டிருக்கும் கருணை கருங்கடலே’ எனவும், இனிப் பிறவி எடுக்கும் போது எம் பெருமான் உன் குணத்தை இடைவிடாது கொண்டு பிறத்தல் வேண்டும்' 3 எனவும் பாடுவர். தண்ணளி சேர் காந்திபதம் தலைக்கொளும் நிற்காரைநகர் ராய.சொக்க லிங்கன்' 'என்று தாள்-தலை உறவு குறிப்பர். 'நாயேனை நஞ்சாம் உலகத் தீநெறி அதனுள் நண்ணாது ஆட்கொண்ட 22. கா.பி.த தாலப்பருவம் - 1 23. மேலது. சப்பாணிப் பருவம் - 1 24. காந்தி அந்தாதி - பாயிரம் - 1